25 ஆண்டுகளாக நட்பை 25 நாட்களில் 'கை'கழுவ வைத்த காங்கிரஸ்... மகாராஷ்ராவில் மகுடம் சூடும் சிவசேனா..!

By vinoth kumarFirst Published Nov 20, 2019, 6:15 PM IST
Highlights

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து பல நாட்களாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து பல நாட்களாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் பாஜக, சிவசேனா இடையே இழுபறி ஏற்பட்டது. சுழற்சி முறையில் முதல்வர் பதவி மற்றும் ஆட்சியில் சம பங்கு என்பதில் அக்கட்சி உறுதியாக இருந்தது. இதனால், ஆட்சி அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தேர்தலில், அதிக இடங்களை பெற்ற கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க வரும்படி பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். 

ஆனால், எங்களிடம் போதிய பெருபான்மை இல்லாததால் நாங்கள் ஆட்சியமைக்கபோதில்லை என்று தெரிவித்துவிட்டனர். அடுத்து பெரிய கட்சியான, சிவசேனா மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர்களும் ஆட்சியமைப்பது தொடர்பாக எதுவும் கூறாததால் ஆளுநர் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்தார். இதற்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். 

இதனையடுத்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க சிவசேனா தீவிரம் காட்டி வந்தது. இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் சிவசேனா ஆட்சியமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார். அதேசமயம் சிவசேனாவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என கூறியதால் மீண்டும் பாஜகவுடன் இணையும் சூழல் சிவசேனாவுக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் வழங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 

click me!