சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் மேற்கு பகுதியில் நடைபெற்ற திமுகவின் பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் பேசுகையில்;- பாஜகவை சேர்ந்த பெண் உறுப்பினர்களான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராமன், கவுதமி குறித்து ஒருமையில் தரக்குறைவாக பேசினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க..நவம்பர் 1 - மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள் இன்று.!!
இவரது பேச்சுக்கு குஷ்பு உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு திமுக எம்.பி. கனிமொழி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார். நடிகைகள் குறித்து ஆபாசமாகவும், இழிவாகவும் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கோரி பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க..ட்விட்டரில் எலான் மஸ்கிற்கு உதவி செய்யும் சென்னை இளைஞர்.. யார் இந்த ஸ்ரீராம்.?
இந்நிலையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக பேச்சாளரின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட நிலையில், அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அங்கு போராட்டம் நடத்திய பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் அடிச்சு ஊத்த போகுது கனமழை.. மக்களே உஷார் !!