DMK Vs BJP : கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா? பாஜக தயார்.. முதல்வருக்கு சவால் விட்ட அண்ணாமலை

Published : Dec 31, 2022, 06:43 PM IST
DMK Vs BJP : கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா? பாஜக தயார்.. முதல்வருக்கு சவால் விட்ட அண்ணாமலை

சுருக்கம்

கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின், அதிமுகவை பாஜக பயமுறுத்தி குளிர்காய்கிறது. தமிழ்நாட்டில் பாஜக பிரதான எதிர்க்கட்சி அல்ல. சொந்தக்காலில் நின்று அவர்களால் வெற்றி பெற முடியாது. அதிமுகவை பயமுறுத்தி, பணிய வைத்து அதில் குளிர்காய பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் பாஜக ஒன்று வளரவில்லை.

பாஜக வளராமல் பாஜகவினரே பார்த்துக் கொள்வார்கள். ஒன்றிய அளவில் ஆளும்கட்சியாக இருப்பதால் இங்கு பப்ளிசிட்டி தாராளமாக தரப்படுகிறதே தவிர, தமிழ்நாட்டில் அவர்களுக்கு இருக்கும் பலத்தை வைத்து அல்ல. தேர்தல் வெற்றிக்காக பாஜக எந்தவித இழிவான காரியத்தையும் செய்வார்கள் என்று பாஜகவை வெளுத்து வாங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது அதன் சொந்த பலத்தில் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சுதந்திர கட்சி மற்றும் சிபிஎம் கட்சிகளினுடனான கூட்டணியின் காரணமாகதான் திமுக ஆட்சிக்கு வந்ததது. . 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அதன் தனி பலத்தால் அல்ல.

இதையும் படிங்க..New Year 2023 : ஆங்கில புத்தாண்டின் முதல் நாளை சிறப்பாக கொண்டாட.. சூப்பரான 5 கோவில்கள்..!

12 கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே 1967லிருந்து, திமுக ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை.  தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தே போட்டியிட்டிருக்கிறது. இப்படி பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும், நீங்கள் படுமோசமான தோல்வியை சந்தித்த தேர்தல்களும் உண்டு முதல்வர் அவர்களே என்று கேள்வி எழுப்பியுள்ளார். துணைப் பிரதமராகும் உங்களின் லட்சியம் கலைந்து போய் நெடுங்காலம் ஆகிவிட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக 2024 ஆம் ஆண்டு தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும். பாஜக கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில், அதை மீண்டும் செய்யத் தயங்காது. நான் உங்களுக்கு சவால் விடுகிறேன் மு.க ஸ்டாலின், கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா ? என்று அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.

இதையும் படிங்க..தனியாரிடம் செல்லும் என்எல்சி.. 2 ‘திமுக’ அமைச்சர்கள் காரணம் - பரபரப்பை கிளப்பும் அன்புமணி ராமதாஸ்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

1947 Newspaper: ஆகஸ்ட் 15, 1947-ல என்ன நடந்தது? அந்த நியூஸ் பேப்பரை இப்ப படிக்கலாம்!
Govt Scheme: இனி நீங்க சொந்த வீட்டுல இருக்க போறீங்க.! வீடு கட்ட அள்ளிக்கொடுக்கும் விஜய்.! உடனே இடத்த ரெடி பண்ணுங்க.!