
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே.வாசனை இன்று முன்னால் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்திக்கிறார். இந்த சந்திப்பில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. சசிகலா அணியினர் ஒரு கட்சியாகவும் ஓ பி எஸ் அணியினர் மற்றொரு கட்சியாகவும் பிரிந்துள்ளது.
தற்போது ஆட்சியில் உள்ள சசிகலா அணியினர் 122 எம்எல்ஏக்களுடன் அதிகார பலத்துடன் உள்ளனர். ஓபிஎஸ் அணியில் 10க்கும் மேற்பட்ட எம் எல் ஏ க்கள் மட்டுமே உள்ளதால் தனது அணியை பலம் சேர்க்க முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை மே மாதம் நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இருப்பதால் தனது அணியை பலம் சேர்க்க யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று ஓ பி எஸ் தரப்பு தீவிரமாக யோசித்தது.
அதன் முதற்கட்டமாக தாமக தலைவர் ஜி.கே.வாசனை இன்று ஓ.பன்னீர் செல்வம் சந்திக்கிறார். அப்போது இருவரும் வரும் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து பேசி முடிவெடுப்பார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.