தள்ளிப்போகுமா ஆர் கே நகர் இடைத்தேர்தல்…

First Published Apr 6, 2017, 10:11 AM IST
Highlights
rk nager election postpone


வரும் 12ம் தேதி ஆர் கே நகரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் எப்படியும் ஜெயித்து விட வேண்டும் என்று வாக்களாகளிடம் போட்டி போட்டுக்கொண்டு பணப்பட்டுவடாவில் ஈடுபடுகின்றனர். இது வரை 15 லட்சம் ருபாய் வரை தேர்தல் ஆணையத்தின் சோதனையில் சிக்கியுள்ளது.

இந்நிலையில் தொப்பி அணியினரும் இரட்டை மின் விளக்கு அணியினரும் மாறி மாறி பணம் விநியோகம் செய்வதாக திமுக, பாஜக, மற்றும் தீபா உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளன.

ஆனால் ஆர் கே நகரை பொருத்தவரை போட்டியிடும் அனைத்து கட்சிகளுமே வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

திமுகவினர் வேண்டும் என்றே தங்களது ஆட்களை வைத்து பணம் கொடுப்பது போல் தங்களது கட்சிகாரரிடம் பணத்தை கொடுத்து அதை வீடியோவில் படம் பிடித்து தொப்பி அணியினர் தான் கொடுக்கின்றனர் என்று வதந்தி பரப்புவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஆர் கே நகரில் ஒரு ஓட்டுக்கு ஒரு கட்சியினர் 4 ஆயிரம் ருபாய் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் பலத்திற்கு ஏற்ப பணத்தை கொடுப்பதால் ஒரு வாக்காளருக்கு 10 ஆயிரம் ருபாய்க்கு மேல் கிடைப்பதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திருமங்கலம் இடைத்தேர்தலை மிஞ்சும் அளவிற்கு ஆர் கே நகர் தொகுதியில் பணமழை கொட்டுவதால் தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்க போகிறது என்று தெரியாமல் உள்ளது.

தேர்தலை தள்ளி வைக்கலாமா என்றும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவாக ரகசிய தகவல் கசிந்துள்ளது. ஆர் கே நகரில் இதுவரை எப்பொழுதும் இல்லாத அளவிற்கு 100 கோடி ருபாய்க்கும் மேல் பணம் விறியோகம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

click me!