திமுக இருக்காது என சொன்ன பல பேர் காணாமல் போய் விட்டார்கள் இந்தியாவில் முதன் முதலில் தோன்றிய மாநில கட்சி திமுக. திமுக போல் எந்த கட்சியும் இவ்வளவு காலம் வாழ்ந்தது இல்லை என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை தனியார் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழுவினர் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, உள்ளிடட மக்களின் கருத்துகளை கேட்டு மனுவாக பெற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டி.கே.எஸ் இளங்கோவன், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை வந்த பிறகு மாநில அரசுக்கான நிதியை ஒன்றிய அரசு தனக்கு வேண்டிய மாநிலங்களுக்கு அதிக பங்களிப்பையும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு குறைந்த பங்களிப்பையும் வழங்கி வருகின்றனர். இது வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு செய்யப்படும் துரோகம். ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையில் சரியான திருத்தம், மாற்றம் கொண்டு வர வேண்டும். ஜி.எஸ்.டியை ரத்து செய்து விட்டு முன்புபோல் விற்பனை வரி, வருமான வரி என்று கொண்டு வர வேண்டும்.
2019ல் இதே கூட்டணி, 2021ல் சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணிதான். நகராட்சி, மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலிலும் இதே கூட்டணிதான். எல்லா காலங்களிலும் இந்த கூட்டணி ஒற்றுமையாக இயங்கி வருகிறது.
2024ல் திமுக என்ற பெயரே இருக்காது என்ற பிரதமர் கருத்துக்கு பதில் அளிக்கையில், இதை நூறு பேர் சொல்லி விட்டார்கள். இந்தியாவிலேயே மிக மூத்த மாநில கட்சி என்றால் அது திமுகதான். 75வது ஆண்டை தொட்டு இருக்கிறது. வேறு எந்த கட்சியும் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்ததில்லை. இந்த 75 ஆண்டுகளில் திமுகவை ஒழித்து விடுவோம் என்று நூற்றுக்கணக்கானவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நாங்கள்தான் இருக்கிறோம். மற்றவர்கள் காணாமல் போய்விட்டார்கள்.
மதுபோதையில் விமான நிலையத்தில் அலப்பறை செய்த வேல்முருகன்; சுத்துபோட்ட அதிகாரிகள்
உதயநிதி பற்றி அண்ணாமலை கூறியதற்கு என்ன நோக்கம் என்று தெரியாது. அவர்கள் எது வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால் பிரதமர் இந்திய, தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார். எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை நாம் முழுமையாக ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். காங்கிரஸ் அதை கைவிட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. அவர்கள் விவசாயிகளை வஞ்சித்து வருகின்றனர் என்பதை உணர்ந்துதான் போராடி வருகின்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக நாங்களும் தான் போராடி வருகிறோம். நானே நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். ஒன்றிய அரசு இரண்டு, மூன்று பணக்காரர்களுக்கு உதவ வேண்டும். ஏழைகளுக்கு உதவக்கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளது என இளங்கோவன் தெரிவித்தார்.