ஒருமுறை கூட ஜெயிக்காத அதிர வைக்கும் சென்டிமெண்ட்.? எடப்பாடியை திகிலில் ஆழ்த்தும் திருவாரூர்!

By vinoth kumarFirst Published Jan 1, 2019, 1:50 PM IST
Highlights

இவ்வளவு குறைவான நாட்களில் தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையத்தின் திடீர் அறிவிப்பு தமிழக அரசியல் கட்சியினரை திக்குமுக்காட வைத்துள்ளது. திருவாரூர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 28 நாட்களே உள்ள நிலையில் அரசியல் பரபரத்து வருகின்றன. வேட்பாளர்களை தேர்வு செய்ய இன்னும் ஒருசில தினங்களே உள்ளதால் யாரை வேட்பாளராக்குவது என திணறி வருகின்றன அரசியல் கட்சிகள். 
 

இவ்வளவு குறைவான நாட்களில் தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையத்தின் திடீர் அறிவிப்பு தமிழக அரசியல் கட்சியினரை திக்குமுக்காட வைத்துள்ளது. திருவாரூர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 28 நாட்களே உள்ள நிலையில் அரசியல் பரபரத்து வருகின்றன. வேட்பாளர்களை தேர்வு செய்ய இன்னும் ஒருசில தினங்களே உள்ளதால் யாரை வேட்பாளராக்குவது என திணறி வருகின்றன அரசியல் கட்சிகள். 

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் பரபரப்பாக பணிகளை தொடங்கி விட்டன. இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை நாளை, நாளை மறுநாள் 2 நாட்கள் கொடுக்கலாம் என்று இரு கட்சிகளும் அறிவித்துள்ளன. மனு கொடுத்தவர்களிடம் அ.தி.மு.க., தி.மு.க. மூத்த தலைவர்கள் 4-ந்தேதி நேர்காணல் நடத்த இருக்கின்றனர்.

கருணாநிதி போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் அங்கு போட்டியிட தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர். அவர்களில் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணனுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறதாம். அ.தி.மு.க. சார்பில் கடந்த முறை போட்டியிட்ட திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க பொருளாளர் பன்னீர்செல்வம், ஜெயலலிதா பேரவை செயலாளர் கலியபெருமாள், திருவாரூர் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் ஆகியோரிடையே போட்டி நிலவி வருகிறது. டி.டி.வி.தினகரனின் அமமுக சார்பாக அம்மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜர், திருவாரூர் நகர செயலாளர் பாண்டியன் இருவரும் விருப்பம் தெரிவித்து இருந்தாலும் எஸ்.காமராஜுக்கே வாய்ப்புகள் அதிகமாம்.

ஆனால், அதிமுகவின் கடந்த காலம் திருவாரூரை திகிலில் மூழ்கடித்துள்ளது. 1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது திருவாரூர் தொகுதி. முதல் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் பிறகு நடந்த தேர்தல்களில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு என இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி வெற்றி பெற்று வந்துள்ளன.

தி.மு.க. 1971, 1977, 1996, 2001, 2006, 2011, 2016-ம் ஆண்டுகளில் அதிகபட்சமாக 7 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1967, 1980, 1984, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், இதுவரை அங்கு அதிமுக ஒருமுறை கூட வெற்றியை ருசித்ததில்லை.  இம்முறை பாஜக, பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை திருவாரூரில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகின்றன. ஆனாலும், அங்கு தி.மு.க- அ.தி.மு.க-  அமமுக ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே தான் கடும்போட்டி நிலவுகிறது. 

கடந்த மாதம் டெல்டா மாவட்டங்களில் கஜா கோரத்தாண்டவம் ஆடியபோது திருவாரூர் தொகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே கஜா புயலின் தாக்கம் இந்த தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. பிரசார பணிகளில் மாற்றம் ஏற்படுத்தி புதிய வியூகத்தை கடைபிடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகையால் பணத்தை அனைத்து கட்சிகளும் தாராளமாக இரைக்க தயாராகி வருகின்றன. ஆக மொத்தத்தில் தேர்தல் ஆணையம் திருவாரூர் தொகுதி மக்களுக்கு பொங்கல் போனஸை அறிவித்துள்ளதாக கமெண்டுகள் பறந்து வருகின்றன. 

click me!