திருவாரூரில் இடைத்தேர்தலில் போட்டி... ஸ்டாலினை கலங்கடிக்க அழகிரியின் அதிரடி அஸ்திரம்!

By vinoth kumarFirst Published Jan 1, 2019, 12:39 PM IST
Highlights

தி.மு.க-வில் சேர்க்கப்படாததால் ஸ்டாலின் மீது உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் மு.க.அழகிரி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு பலத்தைக் காட்டியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால் திமுக வட்டாரம் கதி கலங்க ஆரம்பித்துள்ளது. 

தி.மு.க-வில் சேர்க்கப்படாததால் ஸ்டாலின் மீது உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் மு.க.அழகிரி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு பலத்தைக் காட்டியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால் திமுக வட்டாரம் கதி கலங்க ஆரம்பித்துள்ளது. 

கடந்த 2014 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி நீக்கப்பட்டார். அதன் பிறகு எத்தனையோ முறை முயன்றும் அவரால் மீண்டும் திமுகவில் சேர முடியவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் 7ம் தேதி உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார். அவர் இறந்த மூன்றாவது நாளே திமுக தொண்டர்கள் அனைவரும் எனக்கு பின்னே நிற்கிறார்கள் என கொளுத்திப் போட்டார் மு.க.அழகிரி. 

தன்னை திமுகவில் சேர்த்துக் கொள்ள அடுத்தடுத்து அஸ்திரங்களை ஏவி வந்தார். ஆனால், மொத்தமாக கதவை சாத்தி விட்டார் மு.க.ஸ்டாலின். அடுத்து ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஸ்டாலினுக்கு தலது பலத்தை காட்டி பாடம் புகட்டியே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருந்தார் மு.க.அழகிரி. அதற்கான வாய்ப்பாக திருவாரூர் இடைத்தேர்தலை கையெலெடுக்க திட்டமிட்டுள்ளார் அழகிரி. 

முன்பே தனக்கு திருவாரூர் தொகுதியில் உள்ள செல்வாக்கு குறித்து அறிந்து கொண்டு திரும்பியுள்ளார் அழகிரி. 'கருணாநிதியின் மகன் ' என்கிற ஒரு சொல்லே தன்னை வெற்றி பெற வைக்கும் என்று அவர் நம்புவதாக கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அழகிரி தேர்தலில் போட்டியிடும் இந்தத் திட்டம் அவரது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. `தேர்தல் நின்று நம்ம பலத்தைக் காட்டியே ஆக வேண்டும்' என்று அவருக்கு தூபம் போட ஆரம்பித்துள்ளனர். 

திருவாரூர் தொகுதி திமுக-வுக்கு செல்வாக்குள்ள தொகுதி. இந்த நிலையில் அழகிரி போட்டியிட நேர்ந்தால், திமுக வாக்குகள் பிரியக் கூடும். திமுகவுக்கு செல்லக்கூடிய வாழ்க்கைகள் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கும், கருணாநிதியின் மகன் என்று அனுதாபத்தால் அழகிரிக்கும் தனித்தனியாக பிரியக் கூடும். இது தினகரன் கட்சிக்கோ அல்லது அதிமுகவுக்கு சாதகமாக முடியும். இப்படி வாக்குகள் சரிசமமாக பிரிந்தால் திமுக வேட்பாளர் தோல்வி அடையக் கூடும். இது அழகிரி, திமுகவில் இருப்பது அவசியம் என்ற கருத்தை வலுப்பெறச் செய்து ஸ்டாலின் மனதைக் கரைத்து, மீண்டும் அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ள தூண்டக் கூடும் என்று அழகிரி கருதுகிறார்கள்  ஆதரவாளர்கள். 

திமுகவில் மீண்டும் இணைவதற்கு வேறு வழியில்லாத சூழ்நிலையில், திருவாரூர் சட்டசபை தொகுதியில் சென்டிமென்டாக அழகிரி களமிறங்க வாய்ப்பு இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இடைத்தேர்தல் வெற்றி பார்முலாவில் வல்லவரான அழகிரிக்கும் இதைவிட்டால் வேறு வழியில்லை. அழகிரி அஸ்திரம் எடுபடுமா? பொடி படுமா? என்பது அடுத்தடுத்த நகர்வுகளில் தெளிவாகும்.  
 

click me!