தேர்தலின் போது திமுகவுக்கு எதிராக வேலை செய்தவர்கள் தான் திருப்பூர் துரைசாமி.. வைகோ பகீர் குற்றச்சாட்டு.!

By vinoth kumarFirst Published May 31, 2023, 6:35 AM IST
Highlights

கட்சியின் நலன் கருதி மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிட வேண்டும் என்று வைகோவிற்கு கோரிக்கை வைத்திருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பொதுக்குழுவில் பேசவேண்டியதை பொதுவெளியில் துரைசாமி பேசி வருவதாக துரை வைகோ குற்றம்சாட்டினார். 

அன்று திமுகவை எதிர்த்த  திருப்பூர் துரைசாமி இன்று திமுகவுடன் மதிமுகவை இணைக்க கூறுகிறார் என வைகோ தெரிவித்துள்ளார். 

மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கட்சியின் அவைத்தலைவருமான அண்மையில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், மதிமுக துவக்கப்பட்ட காலத்தில் தாங்கள் வாரிசு அரசியலுக்கு எதிராக உணர்ச்சிமிகு உரைகளை கேட்டே இலட்சக்கணக்கான தோழர்கள் தங்களின் பேச்சில் உறுதியும், உண்மையிருக்கும் என்று நம்பி தங்களை ஆதரித்தனர். ஆனால் தங்கள் குழப்ப அரசியல் நிலைப்பாடு காரணமாக தங்களை ஆதரித்த திமுகவில் பிரிந்துவந்த பெருவாரியான முன்னணித் தலைவர்களும், தோழர்களும் கழகத்தை விட்டு படிப்படியாக வெளியேறி திமுகவிற்கே சென்று விட்டனர். 

இதையும் படிங்க;- Tiruppur Duraisamy MDMK; மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

மேலும் கட்சியின் நலன் கருதி மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிட வேண்டும் என்று வைகோவிற்கு கோரிக்கை வைத்திருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பொதுக்குழுவில் பேசவேண்டியதை பொதுவெளியில் துரைசாமி பேசி வருவதாக துரை வைகோ குற்றம்சாட்டினார். மேலும், திமுகவுடன் மதிமுகவை இணைக்கும் எந்த நோக்கமும் இல்லை என்று திட்டவட்டமாக கூறியிருந்தார். இந்நிலையில், மதிமுகவின் அவைத்தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக துரைசாமி அறிவித்தார். 

இதையும் படிங்க;-  சாராய ஜமீன் மருவூர் ராஜாவுக்கு மஸ்தான் கேக் ஊட்டும் அளவுக்கு என்ன தொடர்பு? இறங்கி அடித்த சி.வி.சண்முகம்.!

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- மதிமுகவின் அவைத்தலைவராக இருந்தத திருப்பூர் துரைசாமி அவர்கள் அந்த பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ராஜினாமா  செய்துவிட்டதாக அறிவித்துள்ளார். திமுகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என திருப்பூர் துரைசாமி கூறினார். அன்று திமுகவை எதிர்த்த துரைசாமி இன்று திமுகவுடன் மதிமுகவை இணைக்க கூறுகிறார். தேர்தலின் போது திமுகவின் வெற்றிக்கு எதிராக திருப்பூர் துரைசாமி செயல்பட்டார் என வைகோ அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

click me!