திண்டிவனம் திமுக எம்.எல்.ஏ. வெற்றி செல்லுமா..? சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

By vinoth kumarFirst Published Mar 10, 2020, 4:06 PM IST
Highlights

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் திமுக வேட்பாளர் சீத்தாபதி சொக்கலிங்கம், அதிமுக வேட்பாளர் எஸ்.பி. ராஜேந்திரன் உள்ளிட்ட 11 பேர் போட்டியிட்டனர். வாக்குப் பதிவின்போது திண்டிவனம் 21-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் குறைபாடு உள்ளதாக, அந்த வாக்குச்சாவடிக்கு மட்டும் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன், ஆணைய அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்.

திண்டிவனம் திமுக எம்.எல்.ஏ. சீத்தாபதி சொக்கலிங்கம் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் திமுக வேட்பாளர் சீத்தாபதி சொக்கலிங்கம், அதிமுக வேட்பாளர் எஸ்.பி. ராஜேந்திரன் உள்ளிட்ட 11 பேர் போட்டியிட்டனர். வாக்குப் பதிவின்போது திண்டிவனம் 21-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் குறைபாடு உள்ளதாக, அந்த வாக்குச்சாவடிக்கு மட்டும் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன், ஆணைய அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்.

இதையும் படிங்க;-  மத்திய அமைச்சராகிறார் ஜி.கே.வாசன்..? சீட் கொடுத்த அதிமுகவுக்கு ஆப்பு வைத்த தமாகா..!

ஆனால், டெல்லியிலுள்ள இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் தொகுதி தேர்தல் அதிகாரிகள் பேசிய பிறகு மறு வாக்குப்பதிவு இல்லை என்று தெரிவித்து, வாக்குகள் எண்ணப்பட்டு திமுக வேட்பாளர் சீத்தாபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 61,879 வாக்குகள் பெற்ற திமுக சீத்தாபதி, 61,778 வாக்குகள் பெற்ற எஸ்.பி.ராஜேந்திரனை விட 101 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் திமுக வேட்பாளர் சீத்தாபதி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுக வேட்பாளர் எஸ்.பி ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்னிலையில் நடைபெற்று வந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

இதையும் படிங்க;- கட்டிலில் கட்டிப்பிடித்து கள்ளக்காதலனுடன் முரட்டுத்தனமாக மனைவி உல்லாசம்... நேரில் பார்த்த கணவர் விபரீத முடிவு

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், 2016-ம் ஆண்டு தேர்தலில் திண்டிவனத்தில் திமுக வேட்பாளர் சீத்தாபதி சொக்கலிங்கம் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

click me!