பாஜகவுக்கு தமிழகத்தில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை... அவர்கள் தயவால் நான் இல்லை...!! எகிறி அடித்த வாசன்..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 10, 2020, 3:28 PM IST
Highlights

நான் கட்சி மாறி விடுவேன் என்று கூட சிலர் வதந்திகளை பரப்புகின்றனர் .  இந்த வதந்திகளில் எந்த உண்மையும் கிடையாது .  தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது கட்சி நன்கு வளர்ந்து வருகிறது. 

பாஜக தயவால் எம்பி பதவி பெறவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார் . ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் .  காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த ஜிகே வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார். இந்நிலையில்  கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தது . இந்நிலையில்  அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுக வழங்கியுள்ளது .  பாஜக கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே  அதிமுக வாசனுக்கு எம்பி பதவி வழங்கியது என பேச்சு அடிபட்டது . இந்நிலையில் அத்தகவலை  முற்றிலுமாக மறுத்துள்ள ஜிகே வாசன்  ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியின் விவரம்:- 

கட்சி தொடங்கி கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம் ,  அதில் தமிழ் மாநில காங்கிரசுக்கு  அதிமுக ஒரு சீட் மட்டுமே  ஒதுக்கியது .  ஆனாலும் நாங்கள் அதிமுக பாஜக கூட்டணி வெற்றிக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தோம்.  இந்நிலையில்  ஆதிமுக ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை எனக்கு  வழங்கியுள்ளது .  எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அதிமுகவிடம் இதை வலியுறுத்திக் கொண்டே இருந்தோம் .  இதற்காக நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை . இந்நிலையில் எங்கள்  கோரிக்கையை ஏற்ற அதிமுக இந்த பதவியை வழங்கி உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது அதிமுகவுக்கு நன்றி...  நான் எம்பி பதவி பெறுவதற்கு டெல்லியில் உள்ள பாஜக உதவியதாக சிலர் கூறுகின்றனர் , ஆனால்  அதில் எந்த உண்மையும் இல்லை.  தமிழகத்திலிருந்து எம்பியை தேர்வுசெய்ய அதிமுக உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் .

 

தமிழகத்தில்  பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏ கூட கிடையாது அப்படி இருக்கும்போது அவர்கள் தயவால் நான் எப்படி மாநிலங்களவை எம்பி பதவி பெற்றேன் என கூறமுடியும் இதற்கோடையில்  நான் கட்சி மாறி விடுவேன் என்று கூட சிலர் வதந்திகளை பரப்புகின்றனர் .  இந்த வதந்திகளில் எந்த உண்மையும் கிடையாது .  தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது கட்சி நன்கு வளர்ந்து வருகிறது.   குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை சிறுபான்மையினர் பாதித்தால் அவர்களை காப்பாற்ற முதல் கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் இருக்கும் .  தேமுதிக மாநிலங்களவை எம்பி பதவி  கேட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த வாசன் , உண்மையிலேயே அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என பதிலளித்தார் .

 

 

click me!