திமுகவுக்கு கொடுத்த டைம் ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த ஓபிஎஸ்-இபிஎஸ்.. 5 மாவட்டத்தில் ஆர்பாட்டம்.

By Ezhilarasan BabuFirst Published Nov 2, 2021, 12:41 PM IST
Highlights

காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமைகளையும் பாலாற்றில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளையும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரங்களிலும் எந்த சூழ்நிலையிலும் உறுதி குலைந்து விடாமல் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு செயல்படுவது மிகவும் இன்றியமையாத கடமை என்பதை திமுக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்படாமல் கேரளத்தின் நிர்பந்தம் காரணமாக நீர் இருப்பை குறைத்திருக்கும் திமுக அரசை கண்டித்தும், உண்மைக்கு மாறாக சப்பைக்கட்டு கட்டும் தமிழ்நாடு நீர்ப்பாசனத்துறை அமைச்சரை கண்டித்தும், அணையில் நீர் இருப்பை அதிகரிக்க வலியுறுத்தி தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட தலைநகரங்களில் வரும் 9ஆம் தேதி அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் அடிப்படை உரிமைகளை அந்த கட்சியினர் அடகு வைத்தும், தங்கள் சுயநலத்திற்காகவும், அரசியல் அழுத்தங்களாலும், தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளை பலி கொடுப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

தென் தமிழ்நாட்டில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட மக்களின் வேளாண்மை மற்றும் குடிநீர் தேவைக்கான முக்கிய ஆதாரமாக விளங்குவது வைகை ஆற்றில் ஓடிவரும் முல்லைப்பெரியாறு அணையின் நீர் ஆகும். தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ளடக்கிய நிலப்பரப்பில் மக்கள் பாசனத்திற்கும் குடிதண்ணீர் தேவைகளுக்கும் தண்ணீரின்றி அல்லற்பட்டு வறுமையில் வாடி அவற்றின் விளைவாக சமூகம் நலிவடைந்த இருந்ததை கண்டு அந்த மக்களின் துயர் துடைப்பதற்கென்று மறைந்த பென்னிகுவிக் அவர்கள் தனது சொந்த செல்வத்தை வழங்கி கட்டிய அணை முல்லைப் பெரியாறு ஆகும்.

இதையும் படியுங்கள்: அடாத மழையில் இடையறாத காவல் பணி.. மரம் விழுந்து மாண்டுபோன போலீஸ் கவிதா.. முதல்வர் 10 லட்சம் நிவாரணம்.

முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு உரியது என்பதையும், அந்த அணை பாதுகாப்பாக இருக்கிறது என்பதையும் அது எப்போதும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலேயே தொடர வேண்டும் என்பதையும் முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் திறக்கப்படுவது சாத்தியமானது என்பதையும் அதன் விளைவாக தமிழகத்தில் 5 மாவட்டங்கள் பெரும் பயன் அடையும் என்பதையும் அசைக்கமுடியாத புள்ளி விவரங்களோடு உச்சநீதிமன்றத்தில்  எடுத்துரைத்து  வாதிட்டு வெற்றி பெற்றவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்பதை வரலாறு நமக்கு கூறிக்கொண்டே இருக்கறது.

இதன் விளைவாக 15 ஆண்டுகளுக்கு முன்னரே உச்சநீதிமன்றம் அணையின் உறுதித் தன்மையை மேலும் நிலைநிறுத்திக் கொண்டு 152 அடி அளவுக்கு தண்ணீர் தோக்கலாம் என தமிழகத்திற்கு சாதமாக ஒரு தீர்ப்பை வழங்கியது. ஆனால் 152 அடி தண்ணீர் தேக்க பட்டால் மட்டுமே கடைமடை பகுதிகளான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக குடிதண்ணீர் தேவைகளுக்கு தண்ணீர் உறுதிசெய்யப்படும் என்பது எதார்த்தம். கேரளா அரசு மீண்டும் முல்லைப் பெரியாறு அணை குறித்து உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை பரப்பி இரண்டு நாட்களுக்கு முன்னர் அணையில் இருந்து 142 அடியை நெருங்கும் நேரத்திலேயே கேரளா அமைச்சர்கள் அதிகாரிகளை சாட்சிக்கு வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசு நீரை திறக்க உடன்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டில் கட்டுப்பாட்டில் உள்ள நீர் தேக்கம், அந்த அணையில் நீர் இருப்பை கண்காணிப்பது போல கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சாட்சிக்கு அழைத்து அவர்களது மேற்பார்வையில் கதவுகளைத் திறந்தது முல்லைப் பெரியாறு அணையின் மீது தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை கேள்விக்குறியாக்கும் செயல் என்பதை நீண்ட அரசியல் அனுபவம் உடைய அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு நினைவூட்டுகிறோம். 

காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமைகளையும் பாலாற்றில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளையும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரங்களிலும் எந்த சூழ்நிலையிலும் உறுதி குலைந்து விடாமல் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு செயல்படுவது மிகவும் இன்றியமையாத கடமை என்பதை திமுக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

இதையும் படியுங்கள்: 3 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசம்.. ஸ்மாட் போன் இலவசம்.. பெண்களை குறிவைத்த பிரயங்கா காந்தி. அலறும் யோகி.

எனவே தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன தேவையையும் குடிநீர் தேவையையும் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டு வரும் திமுக அரசின் செயல்பாட்டினை மாநில மக்களின் உரிமைக்காக போராடுவதில் திமுக அரசு காட்டும் ஏனோதான நிலையையும் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகிற 9-11-2021 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும், இதில் விவசாய பெருங்குடி மக்களும், கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

click me!