கொரோனாவை வென்ற இந்தியா..!! 10 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்..!!

Published : Mar 14, 2020, 04:04 PM IST
கொரோனாவை வென்ற இந்தியா..!! 10 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்..!!

சுருக்கம்

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 85 பேரில் மேலும் ஏழு பேர் குணமடைந்துள்ளனர், இந்நிலையில்  அவர்கள்  அனைவரும்  மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 85 பேரில் மேலும் ஏழு பேர் குணமடைந்துள்ளனர், இந்நிலையில்  அவர்கள் அனைவரும்  மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர் . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது .  நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  இதுவரை சீனாவில் 3 ஆயிரத்திற்கும்  அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் .  உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  4000 ஆக உயர்ந்துள்ளது. 

சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் இந்த வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  கேரளா ,  மராட்டியம் ,  கர்நாடகா , உத்தரபிரதேசம் ,  ராஜஸ்தான் ,  டெல்லி ,  உள்ளிட்ட 13 மாநிலங்களில் கொரோனா வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது . இந்தியாவில் இதுவரை 87 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .  இதில் இருவர் உயிரிழந்துள்ளனர் . கர்நாடகத்தைச் சேர்ந்த 76 வயது முதியவரும் டெல்லியை சேர்ந்த 69 வயது  பெண்மணியும்  வைரஸுக்கு உயிரிழந்துள்ளனர். 

 

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் குணமடைந்துள்ளனர் . உத்திரப்பிரதேச மாநிலத்தில் 5 பேரும் ,  டெல்லி ராஜஸ்தானில் இருந்து தலா ஒருவரும்   குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு திரும்பியுள்ளனர் .  இதன்மூலம்  கொரோனா பாதித்து பின்னர் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது .  கேரள மாநிலத்தில் ஏற்கனவே மூன்று பேர் குணமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது .
 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!