#BREAKING விரட்டி விரட்டி தாக்கும் கொரோனா... வெளவௌத்து போகும் வேட்பாளர்.. மேலும் ஒரு வேட்பாளருக்கு தொற்று..!

Published : Apr 01, 2021, 01:47 PM IST
#BREAKING விரட்டி விரட்டி தாக்கும் கொரோனா... வெளவௌத்து போகும் வேட்பாளர்.. மேலும் ஒரு வேட்பாளருக்கு தொற்று..!

சுருக்கம்

திருச்சி துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திராகாந்திக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

திருச்சி துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திராகாந்திக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் 2ம் அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.  நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 2500 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களில் தான் அதிக அளவு பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே, தேர்தல் பிரச்சாரங்களில் மக்கள் கூட்டம் அதிகளவு கூடுவதால் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட திருச்சி துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவரது கணவர் தங்கமணிக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது வேட்பாளருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து,  இந்திரா காந்திக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில்  திருச்சியில் நடந்த பிரச்சாரத்தில் இந்திரா காந்தியுடன் 7 அதிமுக கூட்டணி வேட்பாளர்களும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, அழகாபுரம் தொகுதி மோகன்ராஜ், மக்கள் நீதி மய்யம் வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபு, அண்ணா நகர் தொகுதி  வேட்பாளர் பொன்ராஜ், குறிஞ்சிபாடி தொகுதி திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம், அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல் ஆகியோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!