திமுகவில் 178 வேட்பாளர்களில் 136 பேர் மீதும், அதிமுகவின் 191 வேட்பாளர்களில் 46 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன

By Ezhilarasan BabuFirst Published Apr 1, 2021, 1:35 PM IST
Highlights

2021 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவின் 191 வேட்பாளர்களில் 46 பேர் குற்றவியல் வழக்கு உள்ள வேட்பாளர்களாக இருக்கின்றனர் என தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. 

2021 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவின் 191 வேட்பாளர்களில் 46 பேர் குற்றவியல் வழக்கு உள்ள வேட்பாளர்களாக இருக்கின்றனர் என தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மற்றும் குற்ற வழக்கின் ஆய்வறிக்கையை தமிழக தேர்தல் கண்காணிப்பகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ் வெளியிட்டார். சட்டமன்ற தேர்தலில் 3998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் சில வேட்பாளர்களின் தகவல்கள் முழுமையாக கிடைக்காத சூழலில் 3559 வேட்பாளர்களின் விவரங்களை ஆய்வு மேற்கொண்டு வெளியிட்டுள்ளோம். 3559 வேட்பாளர்களில் 466 வேட்பாளர்கள் தங்களுக்கு குற்ற வழக்கு உள்ளதாக அறிவித்துள்ளனர். 

207 வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கடுமையான குற்றப்பிரிவுகளில் வழக்குகள் உள்ளன என்று அறிவித்துள்ளனர். கட்சி வாரியாக குற்றவியல் வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் விவரங்களில் திமுகவில் 178 வேட்பாளர்களில் 136 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அதிமுகவில் 191 வேட்பாளர்களில் 46 பேரும், பாஜகவில் 20 வேட்பாளர்களில் 15 பேர் மீதும், காங்கிரஸ் கட்சியில் 21 வேட்பாளர்களில் 15 பேர், தேமுதிகவில் 60 வேட்பாளர்களில் 18 பேர், பாமகவில் 10 பேர், மாகக 5 வேட்பாளர்களில் 3 பேர், இகக 4 வேட்பாளர்களில் 2 பேர், தேகாக 5 வேட்பாளர்களில் 1 பேர் மீதும் குற்றவியல் வழக்குகள் உள்ளன என தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் அமைப்பு தெரிவித்துள்ளது. 

கட்சி வாரியாக குற்றவியல் வழக்குகள் உள்ள வேட்பாளர்களில், திமுகவில் 178 வேட்பாளர்களில் 136 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அதிமுகவில் 191 வேட்பாளர்களில் 46 பேரும், பாஜகவில் 20 வேட்பாளர்களில் 15 பேர் மீதும், காங்கிரஸ் கட்சியில் 21 வேட்பாளர்களில் 15 பேர், தேமுதிகவில் 60 வேட்பாளர்களில் 18 பேர், பாமகவில் 10 பேர், மாகக 5 வேட்பாளர்களில் 3 பேர், இக்க 4 வேட்பாளர்களில் 2 பேர், தேகாக 5 வேட்பாளர்களில் 1 பேர் மீதும் குற்றவியல் வழக்குகள் உள்ளன என தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் அமைப்பு தெரிவித்துள்ளது. பொருளாதார பின்னணி குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் 3559 வேட்பாளர்களில், 652 பேர் கோடீஸ்வரர்கள் அதில் அதிமுகவில் 164 வேட்பாளர்களும், திமுகவில் 155 வேட்பாளர்களும், காங்கிரஸில் 19 வேட்பாளர்களும், பாஜகவில் 15 வேட்பாளர்களும், தேமுதிகவில் 19 பேரும், பாமகவில் 14 பேரும், இககவில் 4 வேட்பாளர்களில் ஒருவர் ஒரு கோடிக்கு மேல் சொத்து உள்ளது என தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 

வேட்பாளர்களின் கல்வி விவரங்களை ஆய்வு மேற்கொண்டதில், 1731 வேட்பாளர்கள் 5ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை படித்துள்ளனர். 1443 பேர் பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி தகுதிகள் இருப்பவர்களாக வேட்பாளர்கள் உள்ளனர். 193 வேட்பாளர்கள் டிப்ளோமாவும், எழுதப்படிக்க தெரிந்தவர்கள் 61 பேரும், எழுதப்படிக்க தெரியாதவர்கள் 106 பேரும், கல்வித்தகுதி குறிப்பிடதவர்கள் 25 பேரும் வேட்பாளர்களாக உள்ளனர். மேலும், ஆய்வு மேற்கொண்ட 3559 வேட்பாளர்களில் 380(11%) பேர் மட்டுமே பெண்கள் என தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் அமைப்பு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் விரவரங்கள் குறிப்பிடப்படவில்லை.
 

click me!