திராவிட மாடல் ஆட்சியில் மது ஒரு அங்கம். குடிக்காத தலைமுறையை குடிக்கும் தலைமுறைவாக மாற்றியது. ஓசியில் பேருந்து பயணத்தை அனுமதிப்பது திராவிட மாடல்தான்.
இந்தி திணிப்பை எதிர்ப்போம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது எனக்கு பிடிக்கவில்லை என குருமூர்த்தி கூறியுள்ளார்.
துக்ளக் இதழின் 52-வது ஆண்டு விழா நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி;- இந்தி திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோம் என அண்ணாமலை கூறியது எனக்கு பிடிக்கவில்லை. அதுது இங்கிருப்பவர்களை ஆதரிப்பதைப் போல் ஆகிவிடும். இந்தி படிப்பதை ஆதரிப்போம் என்று கூறும் ஒரே கட்சியாக தமிழகத்தில் பாஜக இருக்க வேண்டும்.
திராவிட மாடல் ஆட்சியில் மது ஒரு அங்கம். குடிக்காத தலைமுறையை குடிக்கும் தலைமுறைவாக மாற்றியது. ஓசியில் பேருந்து பயணத்தை அனுமதிப்பது திராவிட மாடல்தான். 7.5% இட ஒதுக்கீடு வழங்கினால் திராவிட மாடல் ஆட்சி எனக் கூறுகிறார். இந்தியா முழுவதும் திராவிட மாடல் ஆட்சி கொண்டு செல்லப்படும் எனக் கூறிவிட்டு துபாய் சென்றுவிட்டார். துபாயில் லூலூ மாலின் உரிமையாளர் யூசுப் அலியுடன் ஒப்பந்தம் போடுகிறார். முதல்வருடன் அதிகாரிகள் செல்லவில்லை. ஆடிட்டர்கள் சென்றனர். ஆடிட்டர்கள் எதற்குச் செல்வார்கள் என்று எனக்குத் தெரியாதா? என காட்டமாக கூறினார்.
undefined
மேலும், ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் அவரை யாரும் புகழ்ந்து பேசக் கூடாது. அவரை அவர் மட்டுமே புகழ்ந்து பேசிக் கொள்கிறார். நம்பர் 1 முதல்வர் எனக் கூறுகிறார். உழைப்பின் அடையாளம் எனப் பேசுகிறார். இப்படியாக குடும்ப ஆட்சியில் சிக்கிக் கொண்டுள்ளது திமுக. திராவிட மாடல் என்றால் ஊழல், குடும்ப ஆட்சி. குடும்ப ஆட்சியில் சிக்கிய கட்சிகள் தேனில் விழுந்த ஈ தான். அது வெளியிலும் வரமுடியாது, வந்தாலும் பறக்காது. உள்ளேயே அழிந்துவிடும். திமுகவிற்கு அதுதான் நடக்கப்போகிறது என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- ஆறப்போட்ட அதிமுக.. அதிரடி காட்டிய திமுக.. வேறு வழியில்லாமல் நீதிமன்றம் படியேறிய குருமூர்த்தி..!