திமுக அமைச்சரவை பட்டியல் 34ல் மூன்று இரண்டுகள்... மு.க.ஸ்டாலின் போட்ட புதுக்கணக்கு..!

By Thiraviaraj RMFirst Published May 6, 2021, 5:27 PM IST
Highlights

நிதித்துறை அமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் பழனிவேல் தியாகராஜன், சுகாதாரத்துறை அமைச்சராக பதவியேற்கும் மா. சுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் முதன்முறையாக அமைச்சரவையில் பங்கேற்கின்றனர்.

மு.க. ஸ்டாலினுடன் பதவியேற்கும் அமைச்சர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. முதலமைச்சராகப் பதவியேற்கும் மு.க. ஸ்டாலின் பொது நிர்வாகம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., காவல்துறை, உள்துறை, சிறப்புத் திட்ட அமலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன் உள்ளிட்ட துறைகளுக்குப் பொறுப்பேற்கிறார்.

துரைமுருகன் நீர்வளத் துறை அமைச்சராகவும் கே.என். நேரு முனிசிபல் நிர்வாகத் துறை அமைச்சராகவும் ஐ பெரியசாமி கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் கே. பொன்முடி உயர்கல்வித் துறை அமைச்சராகவும் எ.வ. வேலு பொதுப் பணித் துறை அமைச்சராகவும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விவசாயத்துறை அமைச்சராகவும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விவசாயத்துறை அமைச்சராகவும் தங்கம் தென்னரசு தொழில்துறை அமைச்சராகவும் எஸ். ரகுபதி சட்டத்துறை அமைச்சராகவும் எஸ். முத்துச்சாமி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் பதவியேற்கின்றனர்.

மேலும், கே.ஆர். பெரிய கருப்பன் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் தா.மோ. ஆன்பரசன் ஊரக தொழில்துறை அமைச்சராகவும் மு.பெ. சுவாமிநாதன் தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சராகவும் கீதா ஜீவன் சமூக நலத்துறை அமைச்சராகவும் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீன் வளத்துறை அமைச்சராகவும் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் கா. ராமச்சந்திரன் வனத்துறை அமைச்சராகவும் அர. சக்ரபாணி உணவுத்துறை அமைச்சராகவும் வி. செந்தில் பாலாஜி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராகவும் ஆர். காந்தி கைத்தறித் துறை அமைச்சராகவும் மா. சுப்ரமணியன் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பி. மூர்த்தி வணிகவரித் துறை அமைச்சராகவும் எஸ்.எஸ். சிவசங்கர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் பி.கே. சேகர் பாபு இந்து அறநிலையத் துறை அமைச்சராகவும் பழனிவேல் தியாகராஜன் நிதி மற்றும் மனிதவளத் துறை அமைச்சராகவும் சா.மு. நாசர் பால்வளத் துறை அமைச்சராகவும் செஞ்சி கே.எஸ். மஸ்தான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகவும் பதவியேற்கின்றனர்.

சிவ.வீ. மெய்யநாதன் சுற்றுச்சூழல்துறை அமைச்சராகவும் சி.வி. கணேசன் தொழிலாளர் துறை அமைச்சராகவும் மனோ தங்கராஜ் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் மதிவேந்தன் சுற்றுலாத் துறை அமைச்சராகவும் என். கயல்விழி செல்வராஜ் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும் பதவியேற்கின்றனர்.

34 பேரைக் கொண்ட இந்த அமைச்சரவையில் 2 பெண்களும் 2 சிறுபான்மையினரும் இடம்பெற்றுள்ளனர். நிதித்துறை அமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் பழனிவேல் தியாகராஜன், சுகாதாரத்துறை அமைச்சராக பதவியேற்கும் மா. சுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் முதன்முறையாக அமைச்சரவையில் பங்கேற்கின்றனர்.

click me!