மூணாறு நிலச்சரிவு தோண்ட தோண்ட பிணங்கள்... நெஞ்சை பிழியும் காட்சிகள்..! சோகத்தில் மூணாறு மக்கள்..!

By T BalamurukanFirst Published Aug 11, 2020, 8:48 AM IST
Highlights

தோண்ட தோண்ட பிணங்கள் அள்ளிக்கொண்டே இருக்கிறது மீட்பணி குழு. ஒருதாயின் அரவணைப்பில் கட்டியணைத்தபடி ஒரு குழந்தை உயிரிழந்திருக்கிறது.இந்த காட்சிதான் அனைவரது இதயத்தையும் சுக்குநூறாக்கிவிட்டது.மூணாறு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் மழை பெய்வதால் அங்கே இன்னும் மண்ணுக்குள் புதைந்த உடல்களை அழுகிய நிலையில் மீட்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.

மூணாறு அருகே மண்ணுக்குள் புதைந்த மேலும் 6 பேரின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. இதனால் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம். மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில், கனமழை காரணமாக கடந்த 7-ந்தேதி பயங்கர நிலச்சரிவில் 20 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. வீடுகளில் தூங்கி கொண்டிருந்த 78 பேர் உயிரோடு புதைந்து விட்டனர். இவர்களில் 3 பேர், மேற்கூரை பெயர்த்து கொண்டு உயிர் தப்பினர்.முதல் நாளான 7-ந்தேதி 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மண்ணுக்குள் புதைந்து மடிந்த 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 2-வது நாளில் மேலும் 10 உடல்கள் மீட்கப்பட்டன. 3-வது நாளில் 16 உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இறந்தவர்கள் அடையாளம் காணப்படது.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று கொட்டும் மழையில் மீட்பு பணி நடந்தது. அப்போது மேலும் 6 உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. இதில் ஒரு தாய் மற்றும் கைக்குழந்தையின் உடல்களும் அடங்கும். அந்த குழந்தை, தாயின் அரவணைப்பில் தூங்கியபடி உயிரிழந்திருக்கிறது. உருக்கமான இந்த காட்சி, காண்போரின் கண்களை குளமாக்கியதோடு நெஞ்சையும் நெகிழ செய்திருக்கிறது.இதுவரைக்கும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணி 5-வது நாளாக  நடைபெற்று வருகின்றது.. தோண்ட, தோண்ட பிணங்களாக வந்து கொண்டிருப்பதால் பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

click me!