கொரோனாவிலும் கொள்ளை.! உயிரிழந்த டாக்டர்கள் யார் யார் ?இபாஸ்.பிபிஇகிட் மாஸ்க் வெள்ளை அறிக்கை கேட்கும் எம்எல்ஏ.!

By T BalamurukanFirst Published Aug 11, 2020, 12:44 AM IST
Highlights

மதுரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தொற்று குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் அதிகாரிகள் என கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில கலந்துகொண்ட சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ மாணிக்கம் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

மதுரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தொற்று குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அதிகாரிகள் என கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில கலந்துகொண்ட சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ மாணிக்கம், மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ டாக்டர்.சரவணன் பேசும் போது.." தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிகப்பட்ட நோயாளிகள் பட்டியல் குறிப்பிட்ட மாவட்டங்களில் தங்கம் விலைபோல் நாளுக்கு நாள் ஏற்றம் இறக்கமாக சொல்லுகிறார்கள். சென்னையில் சமீபகாலமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் குறைந்து வருகிறது என்பது சந்தோசமான செய்தி. அதே நேரத்தில் சென்னையை சுற்றியுள்ள திருவள்ளுர் ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மாவட்டங்களில் தொற்று அதிகம் இருப்பதாக காட்டப்படுகிறது.இங்கே தான் எனக்கு சந்தேகம் வலுக்கிறது. சென்னைக்கு ஒரு ட்ரீட்மெண்ட் மற்ற மாவட்டங்களுக்கு வேறு ட்ரீட்மெண்டா? எல்லாம் தமிழக அரசு நிர்வாகம் தானே.! சுதந்திர தினத்தை மனதில் வைத்து சென்னையில் தொற்று குறைத்து காட்டுகிறது தமிழக அரசு.

இ-பாஸ் கள்ளமார்க்கெட்டில் 500 1000க்கு விற்பனை செய்கிறது இந்த அரசு.இபாஸ் கொடுக்குறவுங்களுக்கு யாருக்குமே கொரோனா டெஸ்ட் எடுப்பதில்லை.அவர்கள் ஏன் கொரோனாவை பரப்பக்கூடாது.

இந்தியாவில் கொரேனா தொற்றால் மரணமடைந்த மருத்துவர்கள் பட்டியலில் தமிழகத்தில் மட்டும் 43 பேர் என்கிறது .ஐசிஎம்ஆர். நான் சொல்லுகிறேன். மாவட்டத்திற்கு இரண்டு பேர் வீதம் இறந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் சொல்லும் அறிக்கையை பொய்தான். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐசிஎம்ஆர் அறிக்கையை தவறானது என்கிறார். அப்ப உண்மை தான் என்ன? எத்தனை மருத்துவர் குடும்பத்திற்கு 50லட்சம் ரூபாய் முதல்வர் நிவாரணத்தில் இருந்து கொடுக்கப்பட்டது என்கிற தகவல் இதுவரைக்கும் இல்லை.

இதுவரைக்கு கொரோனா தொற்று இல்லாமல் இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் மாணிக்கம் ,சரவணன் ஆகிய இருவருக்கும் இலவசமாக முதல்வர் சென்னையில் இருந்து கொரோனா தொற்றை இறக்குமதி செய்து விட்டு போய்இருக்கிறார்.மதுரைக்கு முதல்வர் வருகிறார் என்றதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் 40 பேர் என்று வெளியிட்டார்கள். இவர்கள் நினைத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை கூட்டவோ! குறைக்கவோ! முடியும் என்பதை காட்டுகிறார்கள் என்பதை மக்கள் சாதாரணமாகவே புரிந்துள்ளார்கள்.ஏன்  முதல்வர் நிகழ்ச்சிக்கு எம்எல்ஏக்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கவில்லை? மக்கள் மீது எப்படி அலட்சியமாக இந்த அரசு இருக்கிறதோ அதே போன்று எம்எல்ஏக்கள் மீதும் இருக்கிறது என்பதற்கு உதாரணம் இந்த எம்எல்ஏக்கள் தான்.

மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா வார்டில் பணியில் இருக்கும் போது அணிந்துகொள்ளுவதற்காக வாங்கப்படும் பிபிஇ கிட், என்95 முககவசம், சாப்பாடு இதுபோக மற்ற மருத்துவ உபகரணங்கள் குறித்த கொள்முதல் பற்றி தமிழக முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.இவர்கள் கொடுக்கும் உபகரணங்களை கொண்டு  மருத்துவரும், செவிலியரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தான் வேலை செய்கிறார்கள்.மருத்துவர்கள் மரணத்திலும் மாங்காய் திண்ண நினைக்கிறது அதிமுக அரசு. உதாரணத்திற்கு ஒன்று சொல்ல வேண்டும் . ரேபிட் கிட் கொள்முதல். அதன் உண்மை விலை என்ன..?! அதிமுக அரசு கொள்முதல் விலை என்ன? என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியது திமுக. ஆக மக்கள் நலனில் அக்கறை காட்டுங்கள். நீங்கள் அடிக்கும் கொள்ளையில் தேர்தல் நேரத்தில்  மக்களிடம் கொஞ்சம் தூக்கி எறிந்தால் போதும் வாக்குகளை வாங்கிவிடலாம் என்று தப்பு கணக்கு போடாதீர்கள்.உங்கள் கணக்கு இந்த முறை மக்கள் மத்தியில் எடுபடாது. உணர்ச்சி பொங்க.
 

click me!