எடப்பாடியார் சம்பந்திக்கு வந்த திடீர் போன்கால்.. அலறிக்கொண்டு போலீசில் புகார்.. காரணம் என்ன தெரியுமா?

Published : Jan 15, 2022, 09:10 AM IST
எடப்பாடியார் சம்பந்திக்கு வந்த திடீர் போன்கால்.. அலறிக்கொண்டு போலீசில் புகார்.. காரணம் என்ன தெரியுமா?

சுருக்கம்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கு, பணம் கேட்டு கொலை மிரட்டல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கு, பணம் கேட்டு கொலை மிரட்டல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, சென்னிமலை ரோடு, உழவன் நகரில் குடியிருப்பவர் சுப்பிரமணியன். இவர், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி ஆவர். இவருக்கு, கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ம் தேதியில் இருந்து தொடர்ந்து ஒரே செல்போன் எண்ணில் இருந்து தொடர்ந்து பணம் கேட்டு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதனால், அவர் அதிர்ந்து போனார். 

உடனே,  இதுகுறித்து, பெருந்துறை காவல் நிலையத்தில் சுப்பிரமணியன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில்  சத்தியமங்கலம், பன்னாரி ரோடு, உதயம் நகரைச் சேர்ந்த ரங்கசாமி மகன் பால்ராஜ் (60),  சந்திரன் (48). சீனிவாசன் (41)  என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 2 பேர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!