விஸ்வரூபம் எடுக்கும் நடிகை விஜயலட்சுமி விவகாரம்... தூதி தட்டப்படும் வழக்கு.. கைதாகிறார் ஹரி நாட்டார்?

Published : Jan 15, 2022, 08:52 AM IST
விஸ்வரூபம் எடுக்கும் நடிகை விஜயலட்சுமி விவகாரம்... தூதி தட்டப்படும் வழக்கு.. கைதாகிறார் ஹரி நாட்டார்?

சுருக்கம்

தமிழக அரசியல் களத்தில் ஒரு காலத்தில் கழுத்திலும் கைகளிலும் கிலோ கணக்கில் நகைகளை அணிந்தபடி வலம் வந்தவர் ஹரி நாட்டார். சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டுப்படை கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு 36 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தார். தற்போது மோடி வழக்கில் சிக்கி பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டு பரபரப்ப அக்ரஹார சிறையில் உள்ளார். 

சீமானுடன் சேர்ந்து நடிகை விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வழக்கு தொடர்பாக ஹரி நாட்டாரை  பெங்களூரு சிறையில் வைத்து கைது செய்ய திருவான்மியூர் போலீசார் அனுமதி கேட்டுள்ளனர். 

தமிழக அரசியல் களத்தில் ஒரு காலத்தில் கழுத்திலும் கைகளிலும் கிலோ கணக்கில் நகைகளை அணிந்தபடி வலம் வந்தவர் ஹரி நாட்டார். சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டுப்படை கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு 36 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தார். தற்போது மோடி வழக்கில் சிக்கி பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டு பரபரப்ப அக்ரஹார சிறையில் உள்ளார். 

இந்நிலையில், ஃப்ரெண்ட்ஸ் படம் மூலம் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாக தொடர்ந்து வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், சீமானின் தொந்தரவு தாங்க முடியவில்லை என்று கூறி, முகநூலில் வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி, 2020 ஜூலையில் மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமியிடம், எழும்பூர் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார். 

இந்நிலையில், உடல் நலம் சரியாகாத நிலையில் தன்னை மருத்துவமனையில் இருந்து திடீரென வெளியேற்றி விட்டதாகவும், சீமானுக்காக ஹரிநாடார் தன்னை மிரட்டுவதாகவும், சீமான், ஹரி நாடாரை கைது செய்ய வேண்டும் எனவும் விஜயலட்சுமி வலியுறுத்தினார். இதுதொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக, திருவான்மியூர் போலீசார் தற்போது மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். வழக்கு ஒன்றில் கைதாகி, பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடாரை, விஜயலட்சுமி வழக்கில் கைது செய்ய அனுமதிக்கக் கோரி, பெங்களூரு போலீஸாருக்கு திருவான்மியூர் ஆய்வாளர் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், விஐபி அந்தஸ்தில் சிறையில் இருந்தாலும் போலீசாரின் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளால் வெளியில் வர இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமிக்கு மொத்த அதிகாரத்தையும் தூக்கி கொடுத்த பொதுக்குழு உறுப்பினர்கள்.. இபிஎஸ் எடுப்பது தான் முடிவு..!
அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் தள்ளு முள்ளு.. நிகழ்ச்சி அரங்கில் பரபரப்பான சூழல்..