ஆசாமிகளுக்கு பதில் கூற முடியாது.. ஒரே தாக்கு.. அதிரடி பண்ண தமிழிசை..

Published : Jan 14, 2022, 09:50 PM IST
ஆசாமிகளுக்கு பதில் கூற முடியாது.. ஒரே தாக்கு.. அதிரடி பண்ண தமிழிசை..

சுருக்கம்

என்னை பொறுத்தவரை சித்திரை முதல்நாள் தான் தமிழ் புத்தாண்டு என தெரிவித்த ஆளுநர் தமிழிசை, சாமிகளுக்கு பதில் சொல்லலாம், ஆனால் நாராயண சாமி போன்ற ஆசாமிகளுக்கு பதில் கூறமுடியாது என தெரிவித்தார்.  

என்னை பொறுத்தவரை சித்திரை முதல்நாள் தான் தமிழ் புத்தாண்டு என தெரிவித்த ஆளுநர் தமிழிசை, சாமிகளுக்கு பதில் சொல்லலாம், ஆனால் நாராயண சாமி போன்ற ஆசாமிகளுக்கு பதில் கூறமுடியாது என தெரிவித்தார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி (பொறுப்பு) துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை விருகம்பாகத்தில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறிய அவர், நாளை தெலங்கானாவில் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளதாக கூறினார்.

மேலும் கொரோனா காரணமாக, பொதுமக்கள் விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் அமைவதற்கு வழிவகை செய்த பிரதமருக்கு தனது நன்றியை தெரிவித்த அவர், சித்திரை 1 அன்றுதான் தமிழ் புத்தாண்டு என்றும், நான் அதைதான் எப்போதும் கொண்டாடுவேன் என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் இணக்கமாக அரசு செயல்படுகிறது. நான் மருத்துவர் என்பதால் கொரோனா பணிகளை கூடுதலாக கவனித்தேன். கூடுதல் நேரம் புதுவையில் செலவிடுகிறேன். இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பெருமைப்பட வேண்டுமே தவிர இதுகுறித்து அவர் வருத்தப்பட வேண்டியதில்லை என்றார். மேலும் சாமிகளுக்கு பதில் சொல்லலாம், ஆனால் நாராயண சாமி போன்ற ஆசாமிகளுக்கு பதில் கூறமுடியாது என தெரிவித்தார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி