
ஜெயலலிதா இறந்து சரியாக 72 வது நாள், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
சசிகலா சிறை சென்ற அடுத்த 72 வது நாள், இரட்டை இலை சின்னத்திற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டெல்லி போலீசார் தினகரனை கைது செய்தனர்.
எனவே, அடுத்த 72 வது நாளில் சசிகலா குடும்பத்தில் என்ன அசம்பாவிதம் நடக்க போகிறதோ என்று குடும்ப உறவுகள் அனைவரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இதனிடையே, சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன், திருவிடைமருதூர் கோவிலுக்கு செல்லும் வழியில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவ்வாறு சசிகலா குடும்பத்தில் தொடர்ந்து சிக்கல் மேல் சிக்கல் ஏற்படுவதால், மறைந்த ஜெயலலிதாவின் ஆவிதான் அவர்களை பழி வாங்குகிறது என்று என்று மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு, அவர் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி காலமானார்.
அப்போலா மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை சந்திக்க, சசிகலா யாரையும் அனுமதிக்கவில்லை. அதனால், அவர் மீதான சந்தேகம் வலுத்தது.
இதை மக்கள் வெளிப்படையாக தெரிவித்தனர். ஜெயலலிதா மரணம் குறித்த உண்மைகளை சிபிஐ மூலம் விசாரிக்க வேண்டும் என்று பன்னீர் தரப்பும் பொது மக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனாலும், ஜெயலலிதா போலவே, தமது சிகை அலங்காரம் உள்ளிட்ட நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொண்ட சசிகலா, கட்சியின் பொது செயலாளர் ஆகி, முதல்வர் நாற்காலியையும் நெருங்கினார்.
அப்போது, ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலாவை மன்னிக்காது, பழி வாங்கியே தீரும் என்று அதிமுக தொண்டர்களும், பொது மக்களும் அவரை சபிக்க ஆரம்பித்தனர்.
அந்த கால கட்டத்தில் தான், அதாவது, ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 5 ம் தேதி. அதற்கு சரியான 72 வது நாளான பிப்ரவரி 14 ம் தேதி, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை கிடைத்தது.
அது முடிந்த ஒரு சில நாட்களிலேயே, சசிகலாவின் கணவர் நடராசன், உடல் நிலை பாதிக்கப்பட்டு, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, தேர்தலே நிறுத்தப்பட்டது.
அடுத்த சில நாட்களிலேயே, சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன், மாரடைப்பால் உயிரிழந்தார். சசிகலாவால், அவரது இறுதி சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், சசிகலா கைது செய்யப்பட்ட நாளில் இருந்து சரியாக 72 ஆவது நாளில், அதாவது கடந்த 26 ம் தேதி அன்று தினகரன் கைது செய்யப்பட்டார்.
தற்போது, டெல்லி போலீசாரும், வருமான வரித்துறையினரும் தினகரனை வறுத்தெடுத்து வருகின்றனர். இதனால், சசிகலா குடும்பமே அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.
மேலும், போயஸ் தோட்டத்தின் செல்ல பிள்ளையாக கருதப்பட்ட இளவரசியின் மகன் விவேக்கை குறி வைத்து மத்திய அரசின் விசாரணை நெருங்க உள்ளது.
அத்துடன் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில், மத்திய உளவு பிரிவு மற்றும் தமிழக போலீசாரின் விசாரணை சசிகலா குடும்பத்தை நோக்கி திரும்பி உள்ளது.
எனவே, தினகரன் கைதாகி அவதிப்பட்டு வரும், அடுத்த 72 வது நாளில், என்ன பூகம்பத்தை சந்திக்க நேருமோ என ஒட்டு மொத்த சசிகலா குடும்ப உறவுகள் அனைத்தும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.