
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பரம அரசியல் வைரியான மேட்டூர் எம்எல்ஏ செம்மலை அதிமுக இணைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் அதிமுக அமைப்பு செயலாளர் தற்போதைய எம்எல்ஏவான செம்மலை எடப்பாடிக்கு எதிராக கொதித்து எழுந்து விட்டார்.
செம்மலை,எஸ்.கே.செல்வம் வேங்கடாசலம், முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ், அதிமுக முக்கிய பிரமுகர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேட்டூருக்கு தான் வருவதை தடுப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி பல முயற்சிகள் செய்து தோற்று விட்டார்.
எடப்பாடி உத்தரவிட்டும் என்னை தடுக்க மறுத்த ஓமலூர் மற்றும் மேட்டூர் டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தே ஆக வேண்டும் என காரசாரமாக பேசினார்.
இன்றைய கூட்டத்தின் முடிவின் படி சேலம் மாவட்ட அதிமுக தொண்டர்களின் விருப்பம் ஓபிஎஸ் தலைமயில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதே ஆகும்
எங்களின் 2 கோரிக்கைகளுக்கு எடப்பாடி பதிலளிக்காததால் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என செம்மலை தெரிவித்தார்.