கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை.. ஆபத்து கட்டத்தில் உள்ளோம்.. எச்சரிக்கும் பிரதமர் மோடி..!

By vinoth kumarFirst Published Jul 26, 2020, 12:50 PM IST
Highlights

கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை. ஆகையால், மக்கள் எப்போதும் மாஸ்க் அணிய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 

கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை. ஆகையால், மக்கள் எப்போதும் மாஸ்க் அணிய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அந்த வகையில் இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சி, இன்று 11 மணிக்கு தொடங்கியது. இதில், பிரதமர் மோடி  பேசுகையில்;- கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். கார்கில் போரில் வெற்றிக்காக இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு சமூக வலைதளங்களிலும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

21 ஆண்டுகளுக்கு முன்னர், இதே நாளில், நமது ராணுவம் கார்கில் போரில் வெற்றி பெற்றது. அப்போது பாகிஸ்தானுடன் நல்லுறவையே இந்தியா விரும்பியது. ஆனால், எந்தவித காரணமும் இல்லாமல் அனைத்து தரப்பினருடனும் பகையை வைத்திருக்கவே அந்நாடு விரும்பியது. இந்தியாவின் நிலத்தை பிடிக்கவும், உள்நாட்டு குழப்பத்திலிருந்து திசை திருப்பவும், மோசமான திட்டங்களுடன் பாகிஸ்தான் கார்கில் போரை  தொடங்கியது என்றார்.

மேலும், பேசிய அவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீட்கப்படும் விகிதத்தில் மற்ற நாடுகளை விட நம் நாடு சிறப்பாக உள்ளது. இறப்பு விகிதமும் மற்ற நாடுகளை விட மிகக் குறைவு. லட்சக்கணக்கான மக்களின் உயிரை நம்மால் காப்பாற்ற முடிந்தது. ஆனால், கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை. இது பல பகுதிகளில் வேகமாக பரவுகிறது. நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.  கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை. ஆகையால், மக்கள் எப்போதும் மாஸ்க் அணிய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

click me!