ஒமைக்ரான் வந்த 34 பேரில் 32 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்தான்.. பீதியை கிளப்பிய மா.சு.

By Ezhilarasan BabuFirst Published Dec 23, 2021, 12:38 PM IST
Highlights

ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தோர்  4 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது என்றார். நாம் மேற்கொண்ட பரிசோதனையில் S ஜூன் மாறுபாடு கண்டறியப்பட்டதன் மூலம் ஏறக்குறைய இவர்களுக்கு ஒமைக்ரான் இருக்கலாம் என ஏற்கனேவே  முடிவு செய்து விட்டோம் , 

ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள 34 பேரில் 32 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செழித்திக் கொண்ட பிறகும்  ஒமைக்ரான் தோற்று ஏற்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

கடந்த 2019 டிசம்பர் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. இதுவரையில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் ஒட்டு மொத்த உலகமும் திண்டாடி வருகிறது. தடுப்பூசி மட்டுமே இந்த வைரஸில் இருந்து காப்பாற்றும் என்ற முனைப்பில் அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து இதை மக்களுக்கு விநியோகித்து வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கொரோனா பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது, தடுப்பூசிகள் உயிர்காக்கும் நிவாரணியாக இருந்துவருகிறது என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறுகையில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு 18,129 பேருக்கு பரிசோதனை செய்ததில் 114 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 57 பேருக்கு S ஜீன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அவர்களின் மாதிரிகள் அனைத்தும் பெங்களூரில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், அவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் என 104 பேருக்கு தமிழகத்தில் S ஜீன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மத்திய வைராலஜி ஆய்வுக் கூடத்தில் நேற்றிரவு 60 பேர் மாதிரி சோதிக்ப்பட்டு 33 நபர்களுக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது. அதில் 30 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்ற அவர், மத்திய அரசின் வைராலஜி ஆய்வு முடிவு மூலம் தமிரகத்தில் 33 நபர்களுக்கு  தமிழத்தில் ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது. 

பாதிக்கப்பட்டுள்ள 34 பேருக்கும் முதல் நிலை அறிகுறிகள் தலைவளி, தொண்டை அடைப்பு போல மிதமான பாதிப்புதான் என்றார். மேலும், மாதிரி அனுப்பப்பட்ட 57 பேரில் 34 பேருக்கு முடிவு வந்துள்ளது, 23 பேரின் முடிவு வர உள்ளது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோரின் தொடர்பில் இருந்த 4275 நபர்களுக்கு  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தோர்  4 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது என்றார். நாம் மேற்கொண்ட பரிசோதனையில் S ஜூன் மாறுபாடு கண்டறியப்பட்டதன் மூலம் ஏறக்குறைய இவர்களுக்கு ஒமைக்ரான் இருக்கலாம் என ஏற்கனேவே  முடிவு செய்து விட்டோம் , மத்திய அரசு வைராலாஜி கூடம் மூலம் முடிவு வந்த நிலையில் தற்போது  அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம் என கூறினார். 

மேலும், ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு பேர் 18 வயது நிரம்பாத குழந்தைகள் எனவும் அவர்கள் மட்டும்தான் தடுப்பூசி செலுத்தவில்லை மற்ற அனைவருமே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் எனற அவர், S-ஜீன் பாதிப்பு 79 அரசு மருத்துவமனையிலுக், 12 தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 23 சிகிச்சை முடிந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர் அவர்கள் அனைவரும் டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்றார். சென்னையில் 26 நபர்கள் , சேலம் 1 நபர் , கேரளாவில் 1 நபர் , மதுரை 4 ,திருவண்ணாமலை 2 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோரில் 18 வயதுக்கு கீழ் உள்ள இருவர் தவிர  அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் " என்று கூறினர்.  இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் சமூகத்தில் நோயெதிர்ப்பு சக்தியை உறுதி செய்ய முடியும் என்றும், தடுப்பூசி திருத்திக் கொண்டால் அதன் பிறகு தொற்று ஏற்பட்டாலும் நமது உடல் உள்ளுறுப்புகள் பெரிய அளவில் பாதிக்கப்படாது என்றும், நோயின் தாக்கம் என்பது குறைவாகவே இருக்கும் என்றும், நம்மிடம் இருந்து மற்றவருக்கு நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு இருக்காது, தடுப்பு ஊசி செலுத்தி கொண்டால் ஐசியு வரை செல்லும் நிலையை தடுக்க முடியும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்ட 34 பேர் 32 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் ஆவர். எனவே தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட பிறகும் 32 பேரை வைரஸ் தாக்கியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது குறிப்பிடதக்கது.
 

click me!