திமுகவின் பி டீமாக செயல்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டது... உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஈபிஎஸ் கருத்து!

By Narendran S  |  First Published Feb 23, 2023, 4:49 PM IST

அதிமுகவை முடக்க நினைத்த சில எட்டப்பர்கள் திமுகவின் பி டீம் ஆக இருந்து செயல்பட்டவர்கள் முகத்திரை எல்லாம் உச்சநீதிமன்ற தீர்ப்பால் கிழிக்கப்பட்டிருபதாக எதிர்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 


அதிமுகவை முடக்க நினைத்த சில எட்டப்பர்கள் திமுகவின் பி டீம் ஆக இருந்து செயல்பட்டவர்கள் முகத்திரை எல்லாம் உச்சநீதிமன்ற தீர்ப்பால் கிழிக்கப்பட்டிருபதாக எதிர்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முன்னதாக அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என உத்தரவிட கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு பொதுக்குழு செல்லும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதேபோல் பொதுக்குழுவுக்கு இடைக்கால பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உள்ளது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. பலகட்ட விசாரணைகளுக்கு பிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமியின் 50 ஆண்டுகால அரசியல் பயணம்; ஜெயலலிதாவைப் போன்று சாதிப்பாரா?

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதில், அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு அருமையான நாள். இந்த நாளில் நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று எம்ஜிஆர் இடமும் ஜெயலலிதாவிடமும் வேண்டிக் கொண்டேன். இந்த இரு பெரும் பெரிய தலைவர்கள் அருள் கொடுத்த சில நிமிடங்களிலேயே அற்புதமான செய்தி வந்திருக்கிறது. இது சக்தி மிக்க தலைவர்கள் கொடுத்த வரப்பிரசாதம். நம் தலைவர்கள் தெய்வ சக்தி மிக்கவர்கள். எவ்வளவு சோதனைகள் வந்தாலும் நாங்கள் உங்கள் பக்கம் இருக்கின்றோம். ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களை காக்கும் தீர்ப்பையே வழங்குவேன் என சொல்லி எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அரங்குக்கு சென்ற போது இந்த தகவலை சொல்கிறார்கள். அதிமுகவை தோற்றுவித்த போது திமுக ஒரு தீய சக்தி அதை அழிக்க உருவாக்கப்பட்ட இயக்கம் தான் இது என்றார் எம்ஜிஆர்.

இதையும் படிங்க: இது ஒன்னு போதும்.. நாங்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய.. அசராத வைத்தியலிங்கம்..!

அவரது இறுதி மூச்சு உள்ளவரை திமுகவை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர் எம்ஜிஆர்.  அவரது வழித்தோன்றலாக வந்தார் ஜெயலலிதா, அதையே செய்து காட்டினார். அதிமுகவை முடக்க நினைத்த சில எட்டப்பர்கள் திமுகவின் பி டீம் ஆக இருந்து செயல்பட்டவர்கள் முகத்திரை எல்லாம் இன்று கிழிக்கப்பட்டிருக்கின்றன. ஆறு, ஏழு மாதங்களாக அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்ட துன்பமும் வேதனையும் எண்ணில் அடங்காதவை. அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை என்றெல்லாம் குரல் எழுப்பினார்கள் எதிர்க்கட்சிகள். இதற்கெல்லாம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒரு முடிவு கட்டிவிட்டது. கடந்த ஏழு மாதங்களாக எங்கள் கட்சியை வைத்து ஊடகமும் பத்திரிகையும் நடத்தப்பட்டு இருக்கிறது. போதும், இனி அதிமுக நாட்டு மக்களுக்கான இயக்கம் என்பதை தெரிவியுங்கள். மதுரை மண்ணை மிதித்தாலே அதிமுகவுக்கு நல்ல செய்தியும் வெற்றி செய்தியும் கிடைக்கும்.   அதோடு மட்டுமல்லாமல் திருமங்கலத்தில் இருக்கும் ஜெயலலிதாவுக்காக கட்டப்பட்ட கோயிலில் வேண்டியதும் எல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த கோயில் மூலமாகத்தான் அதிமுக தொண்டர்களுக்கு இன்று உயிரோட்டப்பட்டு இருக்கிறது. இதேபோன்று அடுத்த தீர்ப்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வெற்றி பெற்றார் என்று இனிப்பான செய்தி கிடைக்கும். அதிமுக வெற்றி முகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். 

click me!