திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது என்று தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை காட்டுகிறார்கள்.
ராஜராஜ சோழன் ஹிந்து இல்லைன்னு சொல்றவங்க முட்டாள், காட்டுமிராண்டியா இருப்பார்கள் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களை இயங்கி விருதுகளை இயக்குனர் வெற்றிமாறன் பெற்றுள்ளார். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் பேசிய, திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன்;- திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது என்று தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை காட்டுகிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு வெற்றிமாறனுக்கு எதிராக எச்.ராஜா, வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதியும், ஆதரவாக சீமான் உள்ளிட்ட பலர் தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க;- அதிமுக இணை பொதுச்செயலாளர் பதவியை ஓபிஎஸ்-க்கு வழங்க முன்வந்த இபிஎஸ்? வெளியான பரபரப்பு தகவல்..!
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா டுவிட்டர் பக்கத்தில்;- சிவன் கோயில் கட்டிய மாமன்னன் என்ன இஸ்லாமியரா அல்லது கிறிஸ்துவரா இல்லை பௌத்தரா என்பதை அந்த தற்குறியே சொல்லட்டும் என வெற்றிமாறனை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதுகுறித்து பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இராஜராஜ சோழன் ஹிந்து இல்லை என்று சொல்பவன் 'முட்டாள்'! நம்புகிறவன் 'காட்டுமிராண்டி'! பரப்புபவன் அயோக்கியன்! என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க;- இந்த துணிச்சல் எங்கிருந்து வந்தது!இது இந்து கலாச்சாரத்தை அழிக்கும் சதி திட்டம்.. வெற்றிமாறனுக்கு வானதி கண்டனம்