உயிரைப் பணயம் வைத்து உன்னத பணியாற்றும் செவிலியர் என்றைக்கும் போற்றக்கூடியவர்கள்.. டிடிவி.தினகரன்..!

Published : May 12, 2021, 01:42 PM IST
உயிரைப் பணயம் வைத்து உன்னத பணியாற்றும் செவிலியர் என்றைக்கும் போற்றக்கூடியவர்கள்.. டிடிவி.தினகரன்..!

சுருக்கம்

அபாயகரமான சூழலில் எத்தனையோ பேரின் உயிரைக் காப்பாற்ற உழைக்கும் செவிலியர், மருத்துவர்கள் என்றைக்கும் போற்றக்கூடியவர்கள் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

அபாயகரமான சூழலில் எத்தனையோ பேரின் உயிரைக் காப்பாற்ற உழைக்கும் செவிலியர், மருத்துவர்கள் என்றைக்கும் போற்றக்கூடியவர்கள் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;-  மருத்துவத்துறையில் மகத்தான பணியாற்றும் செவிலியர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த செவிலியர் தின வாழ்த்துகள். கொரோனா பேரிடர் போன்ற நெருக்கடியான சூழலிலும் தங்களின் துன்பங்களை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, உயிரைப் பணயம் வைத்து உன்னத பணியாற்றும் செவிலியர் என்றைக்கும் போற்றப்பட வேண்டியவர்கள்.

அபாயகரமான சூழலில் எத்தனையோ பேரின் உயிரைக் காப்பாற்ற உழைக்கும் செவிலியர், மருத்துவர்கள் உட்பட மருத்துவ துறையில் இயங்கும் முன்களப் பணியாளர்கள் திடீரென உயிரிழக்கும் போது அவர்களது குடும்பம் நிர்க்கதியாவதைத் தடுப்பதற்கு 'கார்ப்பஸ் ஃபண்ட்' (Corpus Fund) நிதியை உருவாக்க வேண்டும் என்ற அவர்களது நீண்ட கால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டும்.

மேலும், மருத்துவர்கள், செவிலியருக்கு மத்திய அரசு வழங்குவதற்கு இணையான ஊதியத்தை தமிழக அரசும் வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?