கொரோனாவின் கோரத்தாண்டவம்.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.. அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்

Published : May 12, 2021, 01:08 PM IST
கொரோனாவின் கோரத்தாண்டவம்.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.. அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்

சுருக்கம்

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செய்யூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.இராஜி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செய்யூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.இராஜி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழகத்தில் முதல் அலையை விட கொரோனா 2வது அலை மின்னல் வேகத்தில் பரவி கடும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த அலையில் சிக்கி அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்யூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.இராஜிவிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதியானது. 

பின்னர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இவர் 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தனர். தற்போது ஒன்றிய கழகச் செயலாளராக உள்ளார். இவரது மறைவுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!