எனக்கு ஒரு ஆசை.. ஒட்டுமொத்த சபையையும் உருகவைத்த அப்பாவு.. சட்டமன்றத்தில் நெகிழ்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published May 12, 2021, 1:05 PM IST
Highlights

கட்சிக்கு அப்பாற்பட்டு எல்லோரிடமும் ஒரே மாதிரியாக செயல்படுங்கள் என மு.க ஸ்டாலின் கேட்டு கொண்டார். அதேபோல் நானும் செயல்படுவேன் என்பதை தெரிவித்து கொண்டு அனைவருக்கும் நேரம் வழங்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.  

கட்சி பாகுபடுயின்றி அனைவருக்கும் சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு வழங்கப்படும், கொரோனா பெருந்தோற்று தமிழகத்த்தில் அதிகம் பரவி விட்டது, இந்நேரத்தில் ஆளுங்கட்சியுடன் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும் என சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தினார். 

தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேச்சு: முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், ஊடகத்தினர் என அனைவருக்கும் என் நன்றிகள். 16வது தமிழக சட்டப்பேரவையின் அவை தலைவராக என்னை தேர்தெடுத்த பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். ஏற்கனவே 3 முறை என்னை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக்கிய என்னை மீண்டும் ஒருமுறை வெற்றி பெறவைத்த ராதபுரம் தொகுதி மக்களுக்கு என் நன்றிகள்! என் வெற்றிக்காக உழைத்த கட்சியின் உறுப்பினர்கள், தோழமை கட்சிகளுக்கு என் நன்றிகள்.  

என் மீது பெரும் நம்பிக்கை வைத்து எனக்கு சட்டமன்றத்தில் வாய்ப்பு அளித்ததோடு, எனக்கு மரியாதைக்குரிய இந்த அவையின் தலைமை பொறுப்பை வழங்கிய மு.க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. தொட்டியில் வைத்து வளர்த்த செடி அல்ல! 50 ஆண்டு காலம் வளர்ந்த மரம் தான் ஸ்டாலின். மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திற்கு கிடைத்த தன்னலம் அற்ற தலைவர். என முதலமைச்சருக்கு புகழாரம் சூட்டினார். புரவாசல் வழியாக வரமாட்டேன், மக்களின் ஆதரவுடன் வெற்றிபெற்று வருவேன் என ஸ்டாலின் அன்று ஒரு நாள் கூறினார். இன்று அவர் கூறியது போல நிகழ்ந்துள்ளது. இதே நேரத்தில் நான் அவையில் இருக்கிறேன் என்பதிலும் எனக்கு மகிழ்ச்சி. 

தென் மாவட்டங்களில் இருந்து பல சபாநாயகர்கள் இந்த இருக்கையை அலங்கரித்து உள்ளார்கள் என அவையில் பேசிய அவர் தெரிவித்தார். ஒரு எளிய சாமானிய உறுப்பினரை அவையின் தலைமைக்கு  அழைத்து வந்த மு.க ஸ்டாலின் அவர்களுக்கு என் நன்றி. சட்டத்தை மதித்து, ஒரு நாகரிகமான சபாநாயகராக நான் நடந்து கொள்ளவேன்! அது தான் என் எண்ணம், ஆசை அனைத்தும். கட்சிக்கு அப்பாற்பட்டு எல்லோரிடமும் ஒரே மாதிரியாக செயல்படுங்கள் என மு.க ஸ்டாலின் கேட்டு கொண்டார். அதேபோல் நானும் செயல்படுவேன் என்பதை தெரிவித்து கொண்டு அனைவருக்கும் நேரம் வழங்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.சட்டமன்றதிற்கு என சில மாண்புகள் உள்ளது, அதனை கட்டாயம் கடைபிடித்து பெருமை சேர்ப்பேன். 

இந்த சபை அவசியமற்ற அரசியல் பேசக்கூடிய சபையாக இருக்காது, மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை பேசக்கூடிய அவையாவும், அனைவருக்கும் பேசக்கூடிய வாய்ப்பு வழங்கும் அவையாவும் நிச்சயமாக செயல்படும். எனக்கு வானளாவிய அதிகாரம் இல்லை! இந்த பேரவைக்கு தான் அதிகாரமே தவிர தனிப்பட்ட எனக்கு  மட்டும் அல்ல; இந்த பேரவையின் இருக்கையை விட்டு இறங்கி விட்டால் நானும் சாதாரண உறுப்பினரே என பேசினார். எனக்கு ஒரு ஆசை , 5 ஆண்டு சட்டப்பேரவையில் இந்த அதிகாரத்தால் நான் யாரையும் கண்டிக்கும் சூழல் வந்துவிடக்கூடாது என விரும்புகிறேன். ஆகவே, ஒரு கருத்தை கூறும் முன் அவை தேவையா? என சிந்தித்து பேச வேண்டும்; இவை எனக்கும் பொருந்தும். 

அவையை முறையாக கொண்டு செல்ல என் ஒருவனால் மட்டும் முடியாது, உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் எனக்கு தேவை என இந்த அவையில் கேட்டு கொள்கிறேன். கொரோனா என்னும் பெருந்தோற்று நம்மை வாட்டி வதைக்கும் சூழலில், மக்களை காத்திட அரசு செயல்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தோற்று அதிகமாக பரவி வருகிறது, அதனால் ஆளும் அரசுடன் எதிர்கட்சியும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்றார். அதனையடுத்து பேரவைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.  

 

click me!