ஊரடங்கின் பலன் அடுத்த வாரம் தெரியும்.. களத்தில் சுற்றி சுழலும் அமைச்சர் சேகர்பாபு.

By Ezhilarasan BabuFirst Published May 12, 2021, 12:45 PM IST
Highlights

தற்போது நடைமுறைபடுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் பலன் அடுத்த வாரம் எதிர்பார்க்கபடுகிறது எனவும் அவர் குறிபிட்டார். மேலும் தற்போது சென்னையில் வார்டு ஒன்றிக்கு  2காய்ச்சல் தடுப்பு முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் முதலமைச்சரின் உத்தரவின்படி அதை 4ஆக அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவை இந்து சமயம் மற்றும் அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு : பெரியார்நகர் மருதுத்துவமனையில் 300 படுக்கையுடன் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவு தொடங்க திட்டமிட்டிருப்பதாவகவும் அதேபோல் தற்போது பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் 25 ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை 50ஆக உயர்த்த இருப்பதாக தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு பெரியார் நகர் மருத்துவமனையில் போதிய அளவு செவிலியர் மருத்துவர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது என்றார். 

ஓராண்டிற்குள் சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனை அரசு பொது மருத்துவமனைக்கு நிகராக தரம் உயர்த்தப்படும் என்றார். அதேபோல் தற்போது நடைமுறைபடுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் பலன் அடுத்த வாரம் எதிர்பார்க்கபடுகிறது எனவும் அவர் குறிபிட்டார். மேலும் தற்போது சென்னையில் வார்டு ஒன்றிக்கு  2காய்ச்சல் தடுப்பு முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் முதலமைச்சரின் உத்தரவின்படி அதை 4ஆக அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறை செயளார் ராதாகிருஷ்ணன், ஊரடங்கு உத்தரவால் தொற்று பரவும் சங்கிலி தடைபட்டுள்ளது என்றார். தொற்று அறிகுறி ஏற்பட்டவுடன் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார், இரண்டாம் அலையில் இளைஞர்கள் அதிகம் உயிரிழப்பது தொடர்பாக ICMR ஆய்வு மேற்கொள்ளும் எனவும் அவர் குறிபிட்டார். 

இதனையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளதித்த சென்னை மாநகராட்சி ஆணையர்  ககன்தீப் சிங் பேடி  அறிகுறி இல்லாமல் தொற்று ஏற்படும் தொற்றாளர்கள் வீட்டு தனிமையில் இருக்கும் வசதி இல்லாமல் இருந்தால் அருகில் இருக்கும் கொரோனா தொற்று தடுப்பு மையத்தை அனுக வேண்டும்,  மக்களுக்கு தேவையான படுக்கைகள் தயாராக உள்ளது என கூறினார்.  
 

click me!