
கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கை ரத்து செய்து அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செலவம் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி அமைத்த குழாயில் இருந்து திடீரென கச்சா எண்ணெய் வெளியேறியதால் பொதுமக்கள் அச்சமைடைந்தனர்.
இதனால் அப்பகுதி மக்கள் ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராகவும் எண்ணெய் குழாயை அகற்ற கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுவர்கள் மீது தடியடி நடத்தி 10 க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதை கண்டித்து அப்பகுதி மக்கள் கடந்த 7 நாட்களாக கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கை ரத்து செய்து அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.