
அமைச்சர்கள் மீது காவல்நிலையங்களில் வழக்கு உள்ளதாக ஸ்டாலின் கூறியதற்கு பேப்பரில் எழுதியதெல்லாம் என ஆதாரம் ஆகுமா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு பான், குட்கா அதிபர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் , ஐபிஎஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் உள்ளிடோர் லஞ்சம் வாங்கியதாக ஊடகங்களில் ஆதாரத்துடன் செய்திகள்வெளியாகின.
இதனிடையே தமிழக டி.ஜி.பி.யாக பணியாற்றிய டி.கே.ராஜேந்திரனின் பதவி காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து மீண்டும் 2 ஆண்டுகள் பணி நீடிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் பணி நீட்டிப்பா என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் காவல் நிலைய அதிகாரிகள் குறித்த மானிய கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது.
அப்போது பேசிய ஸ்டாலின் அமைச்சர்கள் மீதும் காவல் அதிகாரிகள் மீதும் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாக தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி வருமான வரி சோதனையில் கைப்பற்றப்பட்ட அவணங்கள் விசாரணையில் உள்ளதாகவும், பணம் பெற்றதாக அரசியல் விரோதம் இருப்பவர்கள் ஒரு காகிதத்தில் எழுதினால் ஆவணமாக கருத முடியாது எனவும் தெரிவித்தார்.
டிஜிபி நியமனம் முறைப்படியே நடைபெற்றுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.