பாமகவில் இருப்பவர்கள் விசிகவில் வந்து இணைய வேண்டும்... வரவேற்கும் வன்னியரசு..!

By Thiraviaraj RMFirst Published Dec 30, 2021, 11:50 AM IST
Highlights

 தலைமையே தவறான பாதையில் நடைபோடுவதால், அக்கட்சியில் உள்ள சமூக நீதியில் அக்கறை கொண்டோர் எல்லாம் கவலையில் இருக்கிறார்கள்.

சமூக நீதியில் அக்கறை கொண்டோர் எல்லாம் கவலையில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் விசிகவில் வந்துசேர வேண்டும் என்று அன்புடன் வரவேற்கிறேன் என விசிக துணை பொதுச்செயலாளஎ வவ்வியரசு தெரிவித்துள்ளார்.

கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரடியாகவும், காணொலி காட்சி வாயிலாகவும் அவர் பேசுவதைப் பார்க்கும்போது உண்மையிலேயே பரிதாபமாக இருக்கிறது. மிகுந்த வெறுப்புடனும், விரக்தியுடனும் பேசுகிறார். ஆர்எஸ்எஸ் சிநேகம் காரணமாக, அந்தச் சித்தாந்தத்தில் அவர் நடைபோட்டு சாதி, மதவெறிக்குத் துணை போனார். இப்போது அவரது கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களுமே பாஜகவுக்குப் போய்க் கொண்டு இருக்கிறார்கள். கட்சி அவரது கட்டுப்பாட்டிலேயே இல்லை.

ஒரு காலத்தில் உண்மையிலேயே சமூக நீதியின்பால் அவருக்கு நம்பிக்கை இருந்தது. அதற்காகப் போராடினார். பரூக் அப்துல்லா, சரத் யாதவ், பூலான்தேவி என்று இந்திய துணைக் கண்டம் முழுக்க பரந்துபட்ட அரசியல் தொடர்பை வைத்திருந்தார். இன்றோ அந்தக் கட்சியை குறிப்பிட்ட மாவட்ட, வட்டார, சாதிக்கான கட்சியாக அவரே சுருக்கிவிட்டார். தலைமையே தவறான பாதையில் நடைபோடுவதால், அக்கட்சியில் உள்ள சமூக நீதியில் அக்கறை கொண்டோர் எல்லாம் கவலையில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் விசிகவில் வந்துசேர வேண்டும் என்று அன்புடன் வரவேற்கிறேன்.

'ஜெய் பீம்' படப் பிரச்சினையில் தமிழ் தேசியம் பேசும் பலர் பாமகவுக்கு ஆதரவான கருத்தை சொல்கிறார்கள். தங்கள் சாதிவெறியை மறைத்துக் கொள்வதற்காக, தமிழ் தேசியம் பேசுபவர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டவர்களின் முகமூடி இந்தப் பிரச்சினையின் போது கிழிந்திருக்கிறது. சீமானின் குரலும், இயக்குநர் கவுதமனின் குரலும் பகிரங்கமாக சாதிவெறிக்கு ஆதரவாக வெளிப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் பெ.மணியரசன் போன்றோர் தமிழ் இந்து என்கிற இல்லாத அடையாளத்தைத் தூக்கிப்பிடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

ஒருவன் தன்னை இந்து என்று பெருமிதமாகச் சொல்கிறான் என்றாலே, அவன் சனாதனத்தை, வர்ணாசிரமத்தை ஏற்றுக் கொண்டான் என்றுதானே அர்த்தம்? எப்படி ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் ஊடுருவிய ஆர்எஸ்எஸ்காரர்கள் அந்தக் கட்சியையே அழித்துக் கொண்டு இருக்கிறார்களோ, அப்படி இப்போது சாதியவாதிகளும், மதவாதிகளும் தமிழ் தேசியத்துக்குள் புகுந்து அந்தக் கோட்பாட்டையே அழிக்கப் பார்க்கிறார்கள். இந்தப் போலித் தமிழ் தேசியர்களிடம் இருந்து தமிழ் தேசியத்தைக் காக்கிற பொறுப்பை விசிக முன்னின்று செய்யும்’’ என்றி அவர் தெரிவித்தார்.

click me!