டி.டி.வி.தினகரன் அணிக்கு தாவும் தோப்பு வெங்கடாசலம்..? பீதியில் எடப்பாடி..!

By vinoth kumarFirst Published May 22, 2019, 12:03 PM IST
Highlights

அதிமுக பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ததையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தினகரன் அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ததையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தினகரன் அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம். இவர் ஏற்கெனவே சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருந்ததோடு ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்து வந்தார். கடந்த 2016-ல் மீண்டும் எம்.எல்.ஏ.வானபிறகு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. புறநகர் மாவட்ட செயலாளர் பதவியும் மாற்றப்பட்டு, தற்போதைய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணனுக்கு வழங்கப்பட்டது. அமைச்சர் பதவி, மாவட்ட செயலாளர் பதவி ஆகிய இரண்டும் தனக்கு கிடைத்த பிறகு தோப்பு வெங்கடாச்சலத்தை அரசியலில் இருந்து ஓரங்கட்டும் நடவடிக்கையில் அமைச்சர் கருப்பணன் மற்றும் செங்கோட்டையனும் தீவிரம் காட்டி வந்தனர். இதனால் தோப்பு வெங்கடாசலத்திற்கு பல்வேறு நெருடிக்கள் கொடுக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கருப்பணனுக்கும், முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான தோப்பு வெங்கடாசலத்திற்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வந்தது. இதனிடையே சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் மீது நடவடிக்கை எடுக்க கூறி முதல்வருக்கு கடிதம் எழுதினார். ஆனால், அமைச்சர் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

மேலும் மக்களவை தேர்தலில் அமமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டதாக அமைச்சர் கருப்பணன் மீது கடந்த வாரம் பத்திரிகையாளர்களிடம் புகார் கூறியதோடு இதற்கான ஆதாரங்களை கட்சி தலைமைக்கும் அனுப்பி வைத்தார். ஆனாலும் கருப்பணன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்து வந்த தோப்பு வெங்கடாசலம் நேற்று முன்தினம் தான் வகித்து வந்த அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ததோடு சேலம் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கடிதத்தை வழங்கினார்.

 

இதனையடுத்து அவர் அதிமுகவில் நீடிப்பாரா? அல்லது தினகரன் அணிக்கு செல்வாரா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்ததது. இந்நிலையில் அமைச்சர் கருப்பண்ணன் மீது 2 நாட்களில் அதிமுக கட்சி தலைமை நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  டி.டி.வி.தினகரன் - ஓ.பிஎஸ் அணி தனித்தனியாக பிரிந்தது முதலே தினகரன் அணியுடன் இணைய வேண்டும் என தோப்பு வெங்கடாசலம் வலியுறுத்தி வந்தார். ஆகையால் அவர் தினகரன் அணிக்கு அவர் தாவலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

click me!