அமைச்சர் பதவி கேட்கும் பிரேமலதா... என்னோட தம்பிமட்டும் என்னவாம்? பிஜேபிக்கு ஷாக்

By sathish kFirst Published May 22, 2019, 11:46 AM IST
Highlights

எக்ஸிட் போல் ரிசல்டில் தேமுதிக ஒரு தொகுதியில் வெல்லும் என தெரிவதால் எப்படியும் அமைச்சரவையில் இடம்பிடிக்க காய் நகர்த்துவதாக தெரிகிறது.

தேமுதிகவுக்கு அளிக்கப்பட்ட நான்கு தொகுதிகளுடன், அதிமுக கூட்டணியில் பாமக 7 தொகுதிகளை பெற்றுள்ளது, பாஜக 5 , தேமுதிக 4 தொகுதிகளையும், புதிய தமிழகம் மற்றும் புதிய நீதிக்கட்சி, NR.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 1 தொகுதியை பெற்றுள்ளன. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் போட்டியிட்டது அதிமுக கூட்டணி.  

அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் இடம்பெற பல நாட்களாக பேரம் நடத்தி கடைசியாக அதிமுகவில் வெறும் 4 தொகுதிகளை வாங்கியது தேமுதிக, தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. அதில், கள்ளக்குறிச்சியில் எல்.கே.சுதீஷ், திருச்சியில், டாக்டர் இளங்கோவன், விருதுநகரில் தேமுதிக அழகர் சாமி, வட சென்னையில் கொள்கை அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிட்டனர்.

இந்நிலையில், இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்த தேர்தல் முடிவுக்குப் பின், தமிழகத்தில் எந்த கட்சிகள் எவ்வளவு தொகுதிகளை கைப்பற்றுமென எக்ஸிட் போல் ரிசல்ட் வெளியானது. அதில், நியூஸ் எக்ஸ் குறைந்தது 34 மக்களவை தொகுதிகள் முதல் அதிகபட்சமாக 38 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அதிமுகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காமலும் போகலாம், அல்லது அதிகபட்சம் 4 தொகுதிகள் வரை தான் கிடைக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக 8-10 தொகுதிகளிலும், பாஜக 1-2 தொகுதிகளிலும், பா.ம.க 2-4 தொகுதிகளிலும், தேமுதிக 1-2 தொகுதிகளிலும் ஜெயிக்க வாய்ப்புள்ளது.  ஆக ஒரு தொகுதி கூட வராது என சொல்லப்பட்ட தேமுதிக ஆச்சர்யமாக ஒரு தொகுதி கண்டிப்பாக ஜெயிக்கும் என சொல்லப்படுவது எந்தத் தொகுதி? அது கள்ளக்குறிச்சியாக இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. எப்படின்னா மற்ற வேட்பாளருக்கு சல்லி காசு கூட கொடுக்காத சுதீஷ் & பிரேமலதா கள்ளக்குறிச்சியில் தாராளமாக செலவு செய்ததாகவே சொல்லப்படுகிறது. 

அதேபோல அந்த தொகுதியில் தேமுதிக வாக்குவங்கியை பலமாக வைத்திருக்கும் தொகுதி,  6 சட்டமன்றத் தொகுதியில் கள்ளக்குறிச்சி, கெங்கவள்ளி, ஆத்தூர், ஏற்காடு தொகுதிகளும் இருப்பதாலும், இதில் முதல்வர் தொகுதி வருவதாலும் அதிமுக கூட்டணிக்கே அதிக வாக்கு விழுந்திருக்க வாய்ப்புள்ளதாக சொல்லபப்டுகிறது.

அப்படி ஒரு வேலை, தேமுதிக ஜெயிக்கும் பட்சத்தில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற முயற்சிகள் நடக்குமாம். கூட்டணி டீல் பேசும் சமயத்தில் ஜெயித்தால் அமைச்சர் பதவியும் ஒரு ராஜ் சபா எம்.பி பதவி கொடுப்பதாக சொன்னதால் அமைச்சர் பதவி கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.கே.சுதீஷ், தேமுதிக இடம்பெறுமா என்பது தேர்தல் முடிவு வெளியான பின்னரே தீர்மானிக்கப்படும் என்றும், தேமுதிக தலைவர் விஜயகாந்த், கூட்டணி கட்சி தலைவர்கள் சேர்ந்து முடிவு செய்யவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 

அதிமுகவை பொறுத்தவரை பன்னீர்செல்வம் மகன், பாமகவில் அன்புமணி என அமைச்சர் பதவி கேட்கவுள்ளதால் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல, நாங்களும் அமைச்சர் பதவி கேட்ப்போம் என தனது தம்பி சுதீஷுக்காக அமைச்சர் பதவி கேட்க்கும் பிளானில் இருக்கிறாராம் பிரேமலதா.

click me!