
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அமமுக தலைவ டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகி உள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதையடுத்து துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அமமுக தலைவர் டிடிவி தினகரன் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனை சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்று
அறிவித்தார். மேலும், தூத்துக்குடியில் இருந்து காவல்துறை உடனே வெளியேற் வேண்டும் என்றும், ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
வலியுறுத்தினார். துப்பாக்கி சூடு சம்பவம் அரசின் தோல்வியா?
இல்லை உளவுத்துறையின் தோல்வியா? என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.