இப்போதாவது ஞானம் வந்ததே.. காயத்ரி ரகுராமுக்கு அட்வைஸ் கொடுத்த திருமாவளவன் - ட்விஸ்ட்டா இருக்கே!

By Raghupati RFirst Published Jan 4, 2023, 8:30 PM IST
Highlights

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் காயத்ரி ரகுராம்.

தமிழக பாஜகவில் அண்ணாமலை இணைவதற்கு முன்னதாக நடிகை காயத்ரி ரகுராம் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தவர். இதனிடையே அண்ணாமலை தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக நடிகை காயத்ரி ரகுராமிற்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

அப்போது நடந்த காசி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சியின் போது காயத்ரி ரகுராம் பதிவிட்ட ட்வீட் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சூர்யா சிவா - டெய்சி விவகாரத்தின் போது, காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி 6 மாதத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார்.

இதையும் படிங்க..நியூ இயரில் மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்.. போலீசிடம் கதறிய மாமனார்.. பரபரப்பு சம்பவம்

இந்த நிலையில் பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நடிகை காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதுமட்டுமில்லாமல், இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், காயத்ரி ரகுராமுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், பெண்களுக்குமட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பாதுகாப்பற்ற கட்சி என 'வால் பிராணன் தலைக்கு ஏற' கத்திக்கொண்டே தானே இருக்கிறோம். இப்போதாவது ஞானம் வந்ததே.பாராட்டுகள் ! இந்துக்களின் மத நம்பிக்கையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் கட்சிதான் பாஜக என்று பதிவிட்டுள்ளார்.

பெண்களுக்கு
மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பாதுகாப்பற்ற கட்சி என 'வால் பிராணன் தலைக்கு ஏற' கத்திக்கொண்டே தானே இருக்கிறோம்.இப்போதாவது ஞானம் வந்ததே.பாராட்டுகள்!
இந்துக்களின் மத நம்பிக்கையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் கட்சிதான் பாஜக. pic.twitter.com/OJZLN6CdaF

— Thol. Thirumavalavan (@thirumaofficial)

இதையும் படிங்க..Pudukkottai : நீங்களா ஏன் இங்க குளிக்கிறீங்க.? புதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை.. மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்

இதையும் படிங்க..ஆளுநர் தான் பொறுப்பு.. திமுக 1,000 தரவில்லை? 2024 கூட்டணி யாருடன்? சஸ்பென்ஸை உடைத்த அன்புமணி ராமதாஸ்

click me!