
பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதால் பல்வேறு பொருட்களின் உயர வழிவகுக்கும் எனவும் எனவே கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரசு பேருந்துகளின் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.
இந்நிலையில், பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதால் பல்வேறு பொருட்களின் உயர வழிவகுக்கும் எனவும் எனவே கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணமதிப்பு அழிப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு என மத்திய அரசு தொடுத்த அடுக்கடுக்கான தாக்குதல்களால் நிலைகுலைந்து போயிருக்கும் தமிழக மக்களைப் பேருந்து கட்டண உயர்வு என்ற சம்மட்டியால் தாக்கியிருக்கிறது அதிமுக அரசு.
கட்டண உயர்வோடு விபத்து / சுங்க வரியும் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் ஈவிரக்கமற்ற இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.