
நாளை தை பிறக்க போகிறது எனவும் அரசியல் ரீதியில் இந்த ஆட்சி முடிய போகிறது எனவும் திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாளை தமிழகம் முழுவதும் தை பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன.
இதைதொடர்ந்து ஒவ்வொரு அரசியல் கட்சியும் அவர்களது கட்சி சார்பில் பொங்கல் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி திமுகவினர் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆதனூரில் நேற்று திமுகவினர் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்க வந்த ஸ்டாலினுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்டாலினுக்கும் துர்கா ஸ்டாலினுக்கும் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் ஆட்டம் பாட்டம் என களைகட்டியது.
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல் வைத்து விழாவை தொடங்கி வைத்தனர்.
இந்நிலையில் அதேபோல், சென்னை கொளத்தூர் தொகுதியில் நடந்த பொங்கல் விழாவில் தி.மு.க. செயல் தலைவரான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் பொங்கல் வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, நாளை தை பிறக்க போகிறது. நிச்சயம் வழியும் பிறக்கும் என தெரிவித்தார்.
மேலும் அதற்கு அரசியல் ரீதியில் இந்த ஆட்சி முடிய போகிறது என அர்த்தம் என குறிப்பிட்டார்.