தி.மு.க.வை நாசமாக்க இவரு ஒருத்தரே போதும்!: அறிவாலயத்தின் மீது குரூப்பாக பாய்ந்து பிடுங்கும் கூட்டணி கட்சிகள்.

By Vishnu PriyaFirst Published Mar 3, 2019, 12:26 PM IST
Highlights

ஏஸியாநெட் தமிழ்தான் முதன் முதலில் இந்த விவகாரத்தை ஸ்மெல் செய்து, சுட்டிக் காட்டியது. இன்று அந்த பிரச்னையானது, தி.மு.க.வின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக உருவெடுத்துவிட்டதுதான் ஹைலைட்டே. 

ஏஸியாநெட் தமிழ்தான் முதன் முதலில் இந்த விவகாரத்தை ஸ்மெல் செய்து, சுட்டிக் காட்டியது. இன்று அந்த பிரச்னையானது, தி.மு.க.வின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக உருவெடுத்துவிட்டதுதான் ஹைலைட்டே. 

விவகாரம் இதுதான்....

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வரும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை மிக மிக அதிகமாக நக்கலும், கிண்டலுமாய் அவித்தெடுக்கிறார் துரைமுருகன்! இந்த செயலுக்கு சிலநேரங்களில் ஸ்டாலினே அவருக்கு க்ரீன் சிக்னல் காட்டுகிறார்! துரையின் இந்த போக்கினால் கூட்டணி கட்சிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர்! என்று கடந்த வாரமே நாம் எழுதியிருந்தோம். 

இந்த நிலையில் இப்போது கம்யூனிஸ்ட் தலைவர்களும், ம.தி.மு.க. நிர்வாகிகள் இருவரும் ஸ்டாலினிடம் இதை வெளிப்படையாக சொல்லி வருந்திவிட்டார்களாம்.

சமீபத்தில் இரு கம்யூனிஸ்டுகளுக்கான தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது அறிவாலயத்தில்.  அப்போது சில மாவட்டங்களில் உள்ள சில ஊர்களைச் சுட்டிக்காட்டிய துரைமுருகன் ‘ஏன்யா இந்த ஊர்லேயெல்லாம் உங்களுக்கு கொடிக்கம்பமே இல்லையே! ஆக அங்கே உறுப்பினர்களும் கிடையாதுங்கிறது உறுதியாகிடுச்சு. அந்த தொகுதியில போயி சீட் கேட்குறீங்களே? கொடுத்தா டிபாசீட்டாவது வாங்குவீங்களா? அது கெடக்கட்டும், இந்த தொகுதியையெல்லாம்  கொடுத்தா உங்க இயக்கம் சார்பா அங்கே  நிறுத்துறதுக்கு ஆளாவது இருக்காங்களா இல்லே நாங்கதான் கொடுக்கணுமா?’ என்று கொக்கரித்துவிட்டாராம்.

காம்ரேட் தலைவர்களின் முகம் கருகிவிட, ‘அட தமாஷுக்கு சொன்னேன் தலைவரே! ஃபீல் பண்ணாதீங்க. வாங்க டீ சாப்பிடலாம்’ என்று அப்புறம் தாஜா பண்ணி கண்ணடித்தாராம். இதை தி.மு.க. கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகளின் தலைவர்களுடன் பகிர்ந்து ரொம்பவே வருந்தியுள்ளனர் கம்யூனிஸ்ட் தலைவர்கள். 

அதேபோல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகளோடு நடந்த ஆலோசனையின் போது ‘ஏன்யா கூட்டணி பேச்சுவார்த்தைக்கு கூட உங்க தலைவர் ஈஸ்வரன் நேர்ல வரமாட்டாரா?  தரிசனமே கொடுக்க மாட்டேங்கிறாரே? எங்க தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுக்க சுத்துறார். ஆனாலும் தேவைப்படுற நேரத்தில் நேர்ல வந்து நின்னுடுறார். உங்காளு என்ன எங்க தளபதியை விட பெரிய ஆளா?

பேச்சுவார்த்தை துவங்குன நாள்ள இருந்து உங்க முகத்தைத்தான் பார்த்துட்டே இருக்கோம். பேசாம ஒண்ணு பண்றோம், ஒரு தொகுதியை ஒதுக்கி, அதுல உங்கள்ள  ஒருத்தரை வேட்பாளரா நிறுத்தணும் ஈஸ்வரன் நிறுத்தப்பட கூடாதுன்னு நிபந்தனை போட்டு தந்துடுறோம்.” என்று தெறிக்கவிட்டிருக்கிறார். 

அடுத்த நிமிஷமே இது ஈஸ்வரனின் காதுகளுக்குப் போக, அவர் அடித்துப் பிடித்து ஃப்ளைட் ஏறி சென்னை வந்து அறிவாலயத்தில் ஆஜராகிவிட்டாராம். அன்றைய பேச்சுவார்த்தை முடிந்த கையோடு ஸ்டாலினின் கவனத்துக்கு துரைமுருகனின் அதட்டலை கொண்டு போன ஈஸ்வரன்...’இதெல்லாம் என்னங்ணா மரியாதை?’ என்று நொந்துவிட்டாராம். ஆனால் ரெஸ்பான்ஸ் இல்லை. 

விடுதலை சிறுத்தைகளை இதைவிட மோசமாக துரை சீண்டிவிட, பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த சிறுத்தை நிர்வாகி ஒருவர் “இந்த கட்சி நாசமா போறதுக்கு இவரு ஒருத்தரே போதும்.” என்று ஆதங்கத்தில் வெளிப்படையாகவே கொட்டிவிட்டாராம். பாவம் தன்மானம் அந்தளவுக்கு காயப்பட்டிருக்கிறது அவருக்கு. அவரது ஆதங்கத்தைக் கண்டு அறிவாலய லாபியே அதிர்ந்திருக்கிறது. 

இனி வரும் தேர்தல்களில், தி.மு.க. உடனான பேச்சுவார்த்தை டீமில் துரைமுருகன் இருந்தால் ‘உங்களோடு கூட்டணியே வேண்டாம்.’ என்று வெளிப்படையாக ஸ்டாலினிடம் சொல்லிவிடும் முடிவுக்கே வந்துவிட்டனராம்  மற்ற கட்சிகள். 

துரைமுருகன் விவகாரம் கைமீறி போவதை ஸ்டாலின் உணரும் நேரம் எப்பவோ வந்துவிட்டது!

click me!