உஷார்...! இதற்காகத்தான் பெரியார் பிரச்சனையை பாஜக கிளப்பியுள்ளது...! கமல் திட்டவட்டம்...!

 
Published : Mar 07, 2018, 12:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
உஷார்...! இதற்காகத்தான் பெரியார் பிரச்சனையை பாஜக கிளப்பியுள்ளது...! கமல் திட்டவட்டம்...!

சுருக்கம்

This is why the BJP has raised the issue of Periyar

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ள இந்த சமயத்தில் பெரியார் பிரச்சனையை கிளப்பியுள்ளனர் என மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி புரிந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. 

இந்நிலையில், பாஜக தொண்டர்கள் திரிபுராவில் அமைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் லெனின் சிலையை அகற்றினர். லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதைப் போல், தமிழகத்தில் பெரியார் சிலைகள்  உடைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழகத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றினைந்து ஹெச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். 

இதையடுத்து ஹெ.ராஜா அந்த பதிவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கினார். ஆனாலும் கண்டனங்கள் வலுத்தன.

இதுகுறித்து பதிலளித்த ஹெச்.ராஜாபெரியார் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட கருத்து தன்னுடையது அல்ல எனவும் தனது அட்மின் எனக்கு தெரியாமல் செய்துவிட்டார் எனவும்  தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் கமல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ள இந்த சமயத்தில் பெரியார் பிரச்சனையை கிளப்பியுள்ளனர் என தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்