திமுக அரசு 4 மாதங்கள் செய்த வேலை இதுதான்.. பட்டியலிட்டு பட்டையை கிளப்பிய எடப்பாடி பழனிசாமி..!

By vinoth kumarFirst Published Sep 23, 2021, 4:36 PM IST
Highlights

நானும் நான்கு ஆண்டுகாலம் 2 மாதம் முதலமைச்சராக இருந்தேன். நாங்கள் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்குகள் போட்டிருக்கலாம். நாங்கள் அப்படி செஞ்சோமா? இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுகவினர் மீது வழக்கு போடுவது முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்துவது ஆகிய வேலைகளைதான் 4 மாதங்களாக திமுக அரசு செய்துள்ள என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அதிமுகவின் ஆலோசனைக் கூட்டத்தில் பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட செயலாளருமான கே.சி வீரமணி மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது, ஊரக உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கினார். 

அப்போது, பேசிய எடப்பாடி பழனிசாமி;- திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் மறந்துவிட்டது. ஆனால் எதிர்க்கட்சியான அதிமுகவை பழிவாங்குவதை மட்டுமே இப்போது வேலையாக செய்து வருகிறது. திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நம்மையும் கிடைக்கவில்லை. ஆனால், மக்களுக்கான இருக்கின்ற ஒரே கட்சி அதிமுக தான். 

இந்த நான்கு மாத காலத்தில் திமுக ஆட்சியின் வேலை என்னவென்றால் அதிமுககாரர்கள் மீது வழக்குப் போடுவது, அவதூறு பிரச்சாரம் செய்வது, முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு பண்ணுவது இதுதான் அவர்களது பணியாக இருக்கிறது. வாக்களித்த மக்களைப் பற்றி சிந்திக்க நேரம் இல்லை. மக்களுக்கு எந்த நன்மையும் இந்த நான்கு மாதத்தில் கிடைக்கபெறவில்லை. நானும் நான்கு ஆண்டுகாலம் 2 மாதம் முதலமைச்சராக இருந்தேன். நாங்கள் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்குகள் போட்டிருக்கலாம். நாங்கள் அப்படி செஞ்சோமா? இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

click me!