10 ஐபிஎஸ் அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி சரவெடி உத்தரவு. காரணம் இதுவா.?

By Ezhilarasan BabuFirst Published Sep 23, 2021, 3:43 PM IST
Highlights

அதேபோல் விடுப்பிலிருந்த எஸ்பி நிஷா கணினிமயமாக்கல் பிரிவு எஸ்பியாகவும், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்பி ஆக இருந்த மாடசாமி சேலம் வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அதிரடி உத்தரவு காவல்துறையின் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவித்து வரும் மக்கள் நலத்திட்டங்கள் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் காவல்துறையை சீரமைக்கும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் நேர்மையான அதிகாரிகள் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் 2 டிஜிபி உட்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் திருச்சி காவல் ஆணையராக இருந்த அருண் சென்னை போலீஸ் பயிற்சி மையம் கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக கார்த்திகேயன் திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், விடுமுறையில் இருந்த மகேந்திர குமார் ரத்தோட் சீருடை தேர்வாணைய உறுப்பினர் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார், டிஐஜி சரவண சுந்தர் திருச்சி சரக டிஐஜியாகவும், ராதிகா ஜெனரல் டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படை ஏடிஜிபியாக இருந்த ஜெயந்தி முரளி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாகவும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆகிய ஏடிஜிபியாக இருந்த அபய்குமார் சிங் ஆயுதப்படை ஏடிஜிபியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் விடுப்பிலிருந்த எஸ்பி நிஷா கணினிமயமாக்கல் பிரிவு எஸ்பியாகவும், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்பி ஆக இருந்த மாடசாமி சேலம் வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் சேலம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இருந்த வேதரத்தினம்  விரிவாக்கப் பிரிவு எஸ்பியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக காவல்துறையில் செய்யப்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றம் காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

click me!