பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு செல்ல பழனிச்சாமிக்கு எந்த தகுதியும் இல்லை. ஓபிஎஸ் அவர்களுக்கு மட்டுமே தகுதி உள்ளது. தென்தமிழகத்திற்கு செல்ல இபிஎஸ்க்கு பயம். பிரதமர் பாதுகாப்பில் ஒளிந்து கொண்டு பசும்பொன் செல்ல நினைக்கிறார்.
ஊழல் வழக்குகளில் சிக்கி எடப்பாடி பழனிசாமி தேர்தலில் நிற்க முடியாத நிலை வரும் என்பதால், தொண்டர்கள் அவரை நம்ப வேண்டாம் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ் ஆதரவாளர் ;- அரசியல் கோமாளி எடப்பாடி பழனிசாமி. அதிமுகவை ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே வளர்க்க முடியும். சேலம் என்பது எடப்பாடி பழனிச்சாமி கோட்டை என்பது தற்போது ஓட்டையாக உள்ளது. பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு செல்ல பழனிச்சாமிக்கு எந்த தகுதியும் இல்லை. ஓபிஎஸ் அவர்களுக்கு மட்டுமே தகுதி உள்ளது. தென்தமிழகத்திற்கு செல்ல இபிஎஸ்க்கு பயம். பிரதமர் பாதுகாப்பில் ஒளிந்து கொண்டு பசும்பொன் செல்ல நினைக்கிறார்.
இதையும் படிங்க;- ஓபிஎஸ் அணிக்கு செல்கிறாரா கே.பி.முனுசாமி? அதிர்ச்சியில் இபிஎஸ்.. ஒரே வார்த்தையில் வதந்திக்கு முற்றுப்புள்ளி..!
இபிஎஸ் ஒரு ஊழல்வாதி. அவர் தொடர்ந்து ஊழல் வழக்கை சந்தித்து வருகிறார் என்ற காரணத்தினால் தான் பிரதமர் மோடி எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க மறுத்து வருகிறார். 4,500 கோடிக்கான ஊழல் வழக்கை தற்போது சந்தித்து வருகிறார். கொடநாடு கொலை வழக்கு என இப்படி பல வழக்குகளில் சிக்கியுள்ளார்.
எனவே விரைவில் அவர் மீது வழக்கு பதிவாகி சிறைக்குச் செல்வார். இதனால் அவர் தேர்தலில் நிற்க முடியாத நிலை உருவாகும் என்றார். எனவே அதிமுகவில் உள்ளவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை நம்ப வேண்டாம் என்றார். எடப்பாடி பழனிச்சாமி சமீப காலமாக உளறி வருகிறார். இபிஎஸ் ஒருபோதும் பொதுச் செயலாளர் ஆக முடியாது எனவும் புகழேந்தி கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்ட 5 மாவட்ட நிர்வாகிகள்..! அதிரடியாக அதிமுகவில் இருந்து நீக்கிய இபிஎஸ்