பலமுறை சொல்லியும் கேட்காத தமிழக அரசு.. பட்டாசு விபத்துகளை தடுக்க இது தான் ஒரே வழி.. விஜயகாந்த்.!

By vinoth kumarFirst Published Jan 2, 2022, 2:37 PM IST
Highlights

ஆங்கில புத்தாண்டு நன்நாளில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆ. புதுப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி அடுத்துள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. புத்தாண்டு தினமான நேற்று பட்டாசு ஆலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தமிழக அரசு, துறை சார்ந்த தனிக்குழுவை அமைத்து கண்காணித்தால் மட்டுமே பட்டாசு விபத்துகளை தடுக்க முடியும் என  விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஆங்கில புத்தாண்டு நன்நாளில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆ. புதுப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் பட்டாசு வெடி விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேமுதிக சார்பில் ஏற்கனவே பலமுறை அறிக்கை அளித்தும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தவறியதால் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுகிறது.

இனிவரும் காலங்களில் பட்டாசு விபத்துகளை தடுக்க, உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்வதுடன், தமிழக அரசு துறை சார்ந்த தனிக்குழுவை அமைத்து பட்டாசு ஆலைகளை கண்காணிக்க வேண்டும்.

பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

click me!