சுதந்திரத்திற்கு பிறகு இதுவே முதல் முறை... மேட்டூர் அணை நீர் திறப்பு குறித்து துரைமுருகன் கருத்து!!

By Narendran SFirst Published May 24, 2022, 6:15 PM IST
Highlights

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மேட்டூர் அணையிலிருந்து மே மாதத்தில் நீர் திறப்பது இதுவே முதல் முறையாகும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மேட்டூர் அணையிலிருந்து மே மாதத்தில் நீர் திறப்பது இதுவே முதல் முறையாகும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு இன்று காலை 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று மாலைக்குள் படிப்படியாக 10,000 கன அடியாக உயர்த்தப்பட்டு, ஜூன் மாதம் இறுதி வரை வழங்கப்படும். ஜுலை மாதத்தில் 10,000 கன அடியிலிருந்து படிப்படியாக 16,000 கன அடியாக உயர்த்தியும், ஆகஸ்ட் மாதத்தில் 18,000 கன அடியாகவும் நீர் தேவைக்கேற்ப வழங்கப்படும். சம்பா மற்றும் தாளடி பாசனம் மேட்டூர் அணையிலிருந்து சம்பா மற்றும் தாளடி பாசனத்திற்கு, செப்டம்பர் 15 முதல் ஜனவரி 28 வரை 12,10,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 205.60 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். இதற்கு அணையிலிருந்து 108.50 டிஎம்சி தண்ணீர் வழங்கியும் மீதமுள்ள 97.10 டிஎம்சி தண்ணீர் பருவமழை மற்றும் நிலத்தடி நீர் கொண்டும் பூர்த்தி செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை இன்று காலை திறந்து வைத்தார். இந்த நிலையில் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மேட்டூர் அணையிலிருந்து மே மாதத்தில் நீர் திறப்பது இதுவே முதல் முறை என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகள் நேற்று முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 4,964 கி.மீ. தூரம் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இதுவரை 4,047 கி.மீ. நீளத்திற்கு (82 சதவிகிதம்) பணிகள் முடிவடைந்துள்ளது. இதில் ஆறுகள் தூர்வாரும் பணி முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது. கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்பணிகள் தினசரி 210 கி.மீ. நீளத்திற்கு போர்க்கால அடிப்படையில் கூடுதல் இயங்திரங்களை பயன்படுத்தி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆறுகள் வாய்க்கால்களுக்கு தண்ணீர் சென்றடைவதற்கு முன் மீதமுள்ள பணிகள் அனைத்தும் 31 ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் மூலம் சுமார் ஐந்தரை லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மேட்டூர் அணையிலிருந்து மே மாதத்தில் நீர் திறப்பது இதுவே முதல் முறையாகும் என்று தெரிவித்துள்ளார். 

click me!