கிரகநிலை சரியில்லாமல் நடைபெற்ற 2019 இந்திய எம்.பி., தேர்தல்... நடக்கும் பேரழிவுக்கு இதுவும் ஒரு காரணமாம்..!

By Thiraviaraj RMFirst Published Apr 8, 2020, 10:06 AM IST
Highlights

இன்னும் சில காலத்துக்கு கடினமான தருணமாகும். இதேவேளை 2019 ஆமாண்டு நடைபெற்ற தேர்தல் கூட ஒரு சாதகமான கிரக நிலைகளில் இடம்பெறவில்லை

கொரோனா வைரஸின் தாக்கத்தைச் சென்ற ஆண்டே கணித்த சிறுவன் எனப் பிரபலம் பெற்ற இளம் ஜோதிடர் அபிக்யா ஆனந்த் சில நாட்களுக்கு முன் உலகம் வரலாறு காணாத உணவுப் பஞ்சத்தினை எதிர் கொள்ளும் என்று சொல்லியிருந்தார். 14 வயதான அபிக்யா அமெரிக்காவில் வாழ்பவர். Conscience எனும் பெயரில் அவரது ஜோதிடக் குறிப்புக்களை வெளியிட்டு வருகிறார். அடுத்து வரும் காலங்களில் உலகில் என்ன நடக்கும் என்பது குறித்து விரிவாகச் கணித்து வெளியிட்டுள்ளார்.

அதில், ‘தற்போது வியாழன், செவ்வாய் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் ஒரே விதத்தில் இணைந்துள்ளன. மே 4 ஆம் தேதி செவ்வாய் வரை இந்நிலை தொடரும். இந்த இணைவில் இருந்து ஜுன் 30 ல் தான் வியாழன் வெளியேறுகின்றது. மே 4 ஆம் தேதி வரை உலகில் கொரோனா தொற்று காரணமாக உணவுப் பற்றாக்குறை உட்பட பல பிரச்சினைகள் நீடிக்கவே செய்யும்.

இந்தக் கிரகங்களின் நிலையையும், நகரங்களை முடக்கி அரசாங்கம் செயற்படும் விதத்தைப் பார்த்தல் நிச்சயம் உணவுப் பற்றாக்குறை நீடிக்கும். உலகில் ஏற்பட்டு வரும் உயிரிழப்புக்களை விட பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்படும். அரசாங்கம் உண்மையில் விவசாயிகளை முடக்கக் கூடாது. ஆனால், இந்திய அரசு விவசாயிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியா தவிர்த்து சில நாடுகளும் விவசாயிகளையும், அவர்களது நடவடிக்கையையும் முடக்கி வருகின்றன.

இந்நிலையில் இந்திய அரசாங்கம் இதில் தற்போது கவனம் செலுத்தத் தவறினால் விரைவில் மிகப்பெரும் பஞ்சத்துக்கு நாம் விலை கொடுக்க வேண்டியிருக்கும். எனவே அரசு இதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயி ஒருவர் தனது கடமையைச் செய்வதால் கொரோனா வைரஸ் பரவ முடியாது. ஏனெனில், குறிப்பிட்ட இடைவெளிகளில் தான் அவர்கள் உழைப்பர். இது ஒரு விலங்குகள் இறைச்சி கடை விற்பனையை விட மிகவும் பாதுகாப்பானது.

இது தவிர உலக நாடுகள் ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் உணவுப் பொருட்களை கோரோனா அச்சம் காரணமாக மிக அதிகளவில் வாங்கிக் குவிக்கின்றனர். இந்த அச்சம் அவசியமற்றது. இதனால், நீங்கள் உணவுப் பற்றாக்குறையை விரைவில் ஏற்படுத்துவீர்கள். விவசாயிகளை ஊக்குவிப்பதைத் தவிர்த்து விட்டு பல்பொருள் அங்காடிகளில் நீங்கள் உடனடி உணவு அல்லது பொதிகளில் உள்ள உணவை அதிகம் உட்கொண்டால் அவற்றில் உள்ள இரசாயனம் பாதிப்பை ஏற்படுத்தும். 

இப்போதைய கிரக நிலைகள் காரணமாக இவ்வாறான உணவுப் பொருட்களில் நச்சுத் தன்மை அல்லது நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்கவும் செய்யும். எனவே கொரோனா பாதிப்பும் அதிகமாகும். கொரோனாவுக்குத் தடுப்பு மருந்துகள் பல வந்தாலும் அதற்கு இணையாக நூற்றுக்கணக்கான புதிய சூப்பர் வைரஸ்களும் இயற்கையில் இருந்து இனி வரும் காலங்களில் வரும்.

இதனால் பலமடங்கு புதிய வியாதிகளும் வரும். நீங்கள் இந்த எல்லா வைரஸ்களுக்கும் ஒவ்வொன்றாகத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது மருத்துவத் துறைக்கு மிகச் சிரமம். எனவே நாம் எமது நோய் எதிர்ப்பு சக்தியைத் தான் மிக மிக வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு மிக முக்கியம் இயற்கை உர விவசாயம். உணவுக்காக விலங்குகளைக் கொல்வதும் தீமை. இச்செயலானது இதற்கேயுரிய கர்மாவை உலகுக்கு அளித்து மனித இனத்தைப் பாதிக்கும்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமே நான் கிரகங்களின் நிலையமைப்புப் படி இந்த புதிய வகைக் கொரோனா வைரஸ் பற்றி எச்சரித்திருந்தேன். ஆனால், மக்கள் யாரும் செவிமடுக்கவில்லை. சுற்றுச் சூழலை மாசுபடுத்தி வரும் அவர்களது வாழ்க்கை முறையை அப்படியே தொடர்ந்தார்கள். எனவே இன்றைய நிலைக்கு ஒரெயொரு தீர்வு தான் உள்ளது. நாம் உடனே இயற்கை அன்னையைக் காயப் படுத்துவதையும், விலங்குகளைத் துன்புறுத்துவதையும், கொல்வதையும் நிறுத்த வேண்டும்.

சமூக வலைத் தளங்களிலும், ஏனைய ஊடகங்களிலும் நான் மே 29 ஆம் தேதி கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நின்று விடும் என்று முன்மொழிந்ததாகக் கூறியுள்ளார்கள். ஆனால், நண்பர்களே நான் மே 29 ல் இந்த வைரஸ் பாதிப்புக் குறையத் தொடங்கும் என்று தான் சொன்னேன். இந்தக் குறையும் வீதத்தின் ஏற்ற இறக்கத்தால் உலகப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரும் ஆபத்து வரவுள்ளது.

இது தவிர ஜூன் இறுதி வரை உலகுக்கு எந்தவித முன்னேற்றமும் இருக்காது என்றே நம்புகின்றேன். ஜூலை தொடக்கத்தில் தான் உலகுக்கு திருத்தமாக மெது மெதுவாக கொரோனா தொற்றுக் குறையத் தொடங்கும். ஜுன் இறுதி வரை உலகில் மருத்துவத் தொழில் துறை தவிர்த்து ஏனைய அனைத்துத் துறைகளிலும் பொருளாதாரம் வீழ்ச்சியிலேயே இருக்கும். ஆனால், அதற்குப் பிறக்கும் இந்த வருட டிசம்பர் வரை கோரானாவின் தாக்கம் உலகம் முழுதும் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.

உண்மையில் இந்தக் கொரோனா தொற்றின் வீரியம் இயற்கை அன்னைக்கு எதிராக இன்றைய மனிதனின் கர்மாவை சமப்படுத்தும் வகையில் தான் தொழிற்படுகின்றது. டிசம்பர் 28 ஆம் தேதி சனியும், வியாழனும் மிகவும் நெருங்கி மகர ராசியுடன் நேர்கோட்டில் வருவதால் அடுத்த அனர்த்தம் ஏற்படவுள்ளது. இந்த அனர்த்தம் பெரும்பாலும் பாரியளவிலான வியாதிகள் மற்றும் பஞ்சமாக இருக்கும்.

இப்போதே விவசாயத்துக்கு உலகப் பொருளாதாரம் இடமளிக்கா விட்டால் இது மனித குலத்துக்கு நிச்சயம் ஒரு பெரிய அழிவைக் கொண்டு வரவுள்ளது. ஆனால், இது ஒரு பூரண அழிவாக இருக்காது. விவசாயம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க நாம் சைவ உணவுகளை உண்பதும், அற்புத மூலிகை மருந்துகளைப் பாவிப்பதும்.

5 தொடக்கம் 6 ஜூனில் ஒரு கிரகணத்தையும் 21 ஆம் தேதி ஜூன் மாதம் நாம் ஒரு சூரிய கிரகணத்தைச் சந்திப்போம். இதுவும் சற்று நல்ல செய்தி தான். நாம் இக்கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் பார்க்கக் கூடாது. வானியல் ஆராய்ச்சி மற்றும் ஜோதிட ஆர்வம் உள்ளவர்கள் உரிய தொலைக் காட்டி அல்லது கண்ணாடியை அணிந்து பார்க்கலாம். இக்கிரகணத்தில் ஏற்படும் மாதிரிகள் மூலம் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதைச் சொல்ல முடியும்.
 
பொதுவாக கிரகணங்கள் சமயத்தில் பட்டினி போன்ற விளைவுகளும் ஏற்படுவதுண்டு. கடந்த வருடம் ஆகஸ்ட்டில் ஏற்பட்ட கிரகணத்தைக் கணித்தே டிசம்பர் மாத இறுதியில் 28 ஆம் தேதியளவில் பூமியில் மனிதர்களுக்கு மிகப் பெரும் ஆபத்து ஏற்படும் என்று எதிர்வு கூறியிருந்தேன். இச்சமயம் ஏனைய முக்கிய கிரகங்களுடன் ராகுவும், கேதுவும் ஒரே நேர்கோட்டில் வந்திருந்தது.

அடுத்ததாக 2021 ஆமாண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி வியாழன், சனி உட்பட 5 தொடக்கம் 6 கிரகங்கள் மகர ராசிக்கு நேராக வருகின்றன. கிட்டத்தட்ட மகர ராசியின் 6 டிகிரிக்கள் இதில் ஒன்றாக வருகின்றது. இதுவும் சாதகமான பலன்களை ஏற்படுத்தும். இந்நிலையில், தற்போதைய கொரோனா முடக்கம் காரணமாக பூரணமாக ஸ்தம்பித்துள்ள உலகப் பொருளாதாரம் 2021 ஆமாண்டு நவம்பர் முதற் கொண்டு தன்னை சரிபார்த்துக் கொண்டு மெது மெதுவாக வீரியமாக எழுச்சி பெறத் தொடங்கும். இக்கால கட்டத்தில் சனியில் இருந்து ஒரே நேர் கோட்டில் இருந்த வியாழன் விலகத் தொடங்குவதால் பொருளாதாரம் மீட்சி பெறத் தொடங்கும்.

இக்காலத்தில் கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் இந்தியாவின் உஜ்ஜயினி போன்ற பல மாநிலங்களில் உள்ள பொது மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும். இதனால் தான் நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினேன். 2021 ஆமாண்டு ஏப்பிரல் 6 ஆம் தேதி வியாழன் கும்பராசிக்கு நேராக வருகின்றது. இது பின் மாறி மாறி கும்பராசிக்கும், மகர ராசிக்கும் நேரே வந்து செல்லும். இறுதியாக 2021 நவம்பர் 21 ஆம் தேதி கும்ப ராசிக்கு வியாழன் வந்த பிறகு இதுவரை காலமும் கிரகங்களின் இணைப்புக் காரணமாக ஏற்பட்ட அத்தனை தொல்லைகளும் நீங்கும்.

முன்னதாக வியாழன், சனி முதற்கொண்டு ஏனைய கிரகங்களும் ஒரே இணைவில் வரும் போது மனித இனத்துக்கு மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தும் என்று தான் ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. ஆனால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் யாவும் மனிதன் இயற்கைக்கு விளைவித்த தீங்கின் பிரதிபலிப்புத் தான். முக்கியமாக இயற்கையில் உள்ள ஏனைய உயிரினங்களுக்கு நாம் இழைக்கும் தீங்கை உடனே நிறுத்த வேண்டும் நண்பர்களே.. ஏனைய தீய கர்மாக்களில் உணவை விரயமாக்குதல் அதிலும் சமீபத்திய புள்ளி விபரங்களில் மேற்குலகத்தவர்கள் மிக அதிகளவு உணவை வீணாக்குவது தெரிய வந்துள்ளது.

இவர்கள் வேதங்களில் பிரம்மா அல்லது கடவுளுக்கு இணையான மகத்துவம் கொண்டது உணவு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பகவத்கீதையும் இதை வலியுறுத்துகின்றது. கொரோனா முடக்கத்தால் சில நாட்களுக்கு வீடுகளில் அடைபட்டுக் கிடக்க இயலாத நீங்கள் உணவுக்காக எத்தனை பறவைகளும், கோழிகளும் சிறிய கூண்டுகளுக்குள் அடைக்கப் பட்டு விநியோகிக்க படுகின்றன என்பதையும் அப்போது அவை அனுபவிக்கக் கூடிய துன்பத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் இது போன்று மில்லியன் கணக்கான விலங்குகள் உணவுக்காகக் கழுத்தறுத்துக் கொல்லப் படுகின்றன. எல்லா உயிரினங்களுக்குமான எமது பூமித் தாய் இதை எவ்வளவு காலம் பொறுத்துக் கொள்வாள்? இதனால் மனித இனத்துக்கு எதிரான வைரஸ்களை குறிப்பிட்ட ஒவ்வொரு கால இடைவெளியிலும் அவள் வெளியிடுவாள். ஏனைய இயற்கை அனர்த்தங்கள் மூலமும் மனித இனத்தை காலத்துக்குக் காலம் அழிக்கச் செய்வாள்.

இறுதியாக 2019 கடைசி, 2020 மற்றும் 2021 ஆமாண்டுகளில் வியாழன் மேற்கொள்ளும் இரட்டிப்பு நகர்வுகள் (double transits) மனித இனத்தை இந்த இக்கட்டான சூழலில் வைத்துள்ளன. சமீபத்தில் மார்ச் 30 ஆம் தேதி வியாழன் மகர ராசிக்கு நேராக வந்துள்ளது. ஜுன் 30 இல் இது தனுசு ராசிக்கு நேராக வருகின்றது. பிறகு நவம்பர் 20 இல் திரும்பவும் மகர ராசிக்கு வருகின்றது. இது இன்னும் சில காலத்துக்கு கடினமான தருணமாகும். இதேவேளை 2019 ஆமாண்டு நடைபெற்ற தேர்தல் கூட ஒரு சாதகமான கிரக நிலைகளில் இடம்பெறவில்லை’’ என அவர் தெரிவித்துள்ளார். 

click me!