சண்டியர் தனம் காட்டும் அமெரிக்கா... WHO க்கான நிதியை நிறுத்துவதாக அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!!

By Thiraviaraj RMFirst Published Apr 8, 2020, 8:55 AM IST
Highlights

உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தி வைக்க போவதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் திடீரென அறிவித்திருக்கிறார். இந்த நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டியிருக்கிறார் ட்ரம்ப். அதேநேரத்தில்,மலேரியா மாத்திரை வழங்காவிட்டால் இந்தியா எதிர்விளைவுகளை சந்திக்கும் என மிரட்டி பார்க்கிறார் ட்ரம்ப்.இந்தியாவிலும் கொரோனா ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ட்ரம்ப் மிரட்டுவது வல்லரசு நாடு என்கிற சண்டியர் தனத்தை இந்தியாவிடம் காட்டியிருக்கிறது.

T.Balamurukan

உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தி வைக்க போவதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் திடீரென அறிவித்திருக்கிறார். இந்த நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டியிருக்கிறார் ட்ரம்ப். அதேநேரத்தில்,மலேரியா மாத்திரை வழங்காவிட்டால் இந்தியா எதிர்விளைவுகளை சந்திக்கும் என மிரட்டி பார்க்கிறார் ட்ரம்ப்.இந்தியாவிலும் கொரோனா ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ட்ரம்ப் மிரட்டுவது வல்லரசு நாடு என்கிற சண்டியர் தனத்தை இந்தியாவிடம் காட்டியிருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தை முந்தி செல்கின்றது.பல்வேறு நாடுகளை சேர்ந்த 82,019 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,430,516  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 301,828 பேர் குணமடைந்திருக்கிறார்கள். 47,912 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. அங்கு பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி விட்டது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மலேரியாவுக்கு தரப்படும் அதிக செலவில்லாத "ஹைடிராக்சி குளோரோகுயின்" மாத்திரை நல்ல பலன் தருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார். உலகின் பல நாடுகள் இம்மருந்தை பரித்துரைத்துள்ளன. இந்திய மருத்துவ சங்கமும் கொரோனா சிகிச்சைக்கு "ஹைட்ராக்சி குளோரோகுயின்" மருந்தை பரிந்துரை செய்துள்ளது. உலகிலேயே இம்மருந்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் அதிகரிக்கத் தொடங்கியதும், மருந்து இருப்பை உறுதிபடுத்த ஹைட்ராக்சி குளோரோகுயின், பாராசிட்டமால் உள்ளிட்ட 14 வகையான மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி தடை விதித்தது.

இதனால், அமெரிக்கா, ஸ்பெயின், இலங்கை உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டன. ஏற்றுமதிக்கு தடை விதித்ததை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தின. இந்தியாவின் ஏற்றுமதியில் 47 சதவீதம் அமெரிக்காவுக்கு தான்  செல்கிறது. 
இதைத்தொடர்ந்து ஏற்றுமதிக்கான தடையை தளர்த்துவது குறித்து இந்தியா பரிசீலித்து வந்த நிலையில், நேற்றுமுன்தினம் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்த அதிபர் டிரம்ப், ‘‘ஹைட்ட்ராக்சி குளோரோகுயின் மருந்து வேண்டுமென பிரதமர்  மோடியிடம் கேட்டுள்ளேன். இந்தியாவுடன் நல்ல நட்புறவு நிலவுவதால், அவர் தராமல் இருந்ததால்தான் ஆச்சரியப்படுவேன். அதே சமயம் அவர் மருந்தை தர மறுத்தாலும் பரவாயில்லை. அதற்கான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடலாம்,’  என எச்சரிக்கை விடுத்தார். இந்த மிரட்டலைத் தொடர்ந்து, தற்போது மத்திய அரசு பணிந்துள்ளது.

இந்த நிலையில்,உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தி வைக்க போவதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதிக நிதி வழங்கினாலும் உலக சுகாதார நிறுவனம் பல விவகாங்களில் அமெரிக்காவுடன் முரண்டுபட்டு இருந்துள்ளது. சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் செயல்படுவது போல் தோன்றுகிறது எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளது. 

click me!